வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sinoj

சீனாவுடனான தனது எல்லையில் சாலைகள் அமைக்கும் பணியை இந்தியா வேகப்படுத்தியுள்ளது.

அதனால் அவர்கள் மிகவும் கோபம் அடைந்தனர் என்றார் அவர். சமீப நாட்களில் பெய்ஜிங் அதிகாரிகள் வெளியிட்ட அறிக்கைகளில் இந்தக் கண்ணோட்டம் பிரதிபலித்தது என்று அவர் குறிப்பிட்டார். ஆக்கிரமிப்பு என்பது சீனாவின் வெளியுறவுக் கொள்கையில் முக்கியமான அம்சமாக உள்ளது. குறிப்பாக கடந்த சில மாதங்களில் அந்தப் போக்கு அதிகரித்துள்ளது. தங்களுடைய ஆதிக்கம் செலுத்தக் கூடிய ராணுவ பலத்தை பக்கத்து நாடுகளுக்கு நினைவுபடுத்தும் வகையில் சீனாவின் அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

கல்வான் பள்ளத்தாக்கு மோதலில் இந்திய வீரர்கள் உயிரிழந்த நிலையிலும், ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் கருத்துகளை வெளியிடுவதற்கு டெல்லி மற்றும் பெய்ஜிங் அதிகாரிகளுக்கு பெரும்பாலும் கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டிருந்தன.

உறவுகளை மேம்படுத்துவதற்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி, சீன அதிபர் ஜின்பிங் மேற்கொண்ட முயற்சிகளின் பலன் வீணாகிவிடக் கூடாது என்பதற்காக இந்தக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது என்று குகேல்மன் தெரிவித்தார்.

2014ல் மோதி பதவியேற்ற பிறகு, இருவரும் 18 முறை சந்தித்துப் பேசியுள்ளனர். ``ஆனால் கடந்த சில நாட்களில் அவற்றின் பலன்கள் எல்லாம் முறியடிக்கப்பட்டுள்ளன. தாங்கள் வெளியிட்ட அறிவிப்புகளை, இந்தியாவும் சீனாவும் எப்படி மக்கள் மத்தியில் அமல்படுத்திக் காட்டப் போகின்றன என்பது கூர்ந்து கவனிக்கப்படும்'' என்று அவர் கூறினார்.

``சீனா பலவீனம் அடையவோ அல்லது இந்தியாவின் வார்த்தைகளுக்குக் கட்டுப்பட்டு நடப்பதையோ விரும்பாது'' என்பதால், அந்த நாடு பழைய நிலைக்குத் திரும்புவது சிக்கலானதாக இருக்கும் என்று யுன் கூறியுள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையில் எல்.ஏ.சி.யில் உள்ள 3,440 கிலோ மீட்டர் நீளத்தில், பல தசாப்த காலங்களாகத் தீர்வுகாணப்படாமல் உள்ள பிரச்சனைகள் உள்ளிட்ட, முக்கியமான விஷயங்களுக்கு ஒரு சில தினங்களில் தீர்வை ஏற்படுத்திவிட முடியாது.

``எனவே, இது ஒரு நல்ல தொடக்கம்'' என்கிறார் குகேல்மன். ``பேச்சுகளே இல்லாமல் இருப்பதைவிட, பேச்சுகள் நடந்திருப்பது நல்லது. ஆனால் நாம் எச்சரிக்கையுடனும் பரந்த சிந்தனையுடனும் இருக்க வேண்டும்'' என்றும் அவர் கூறியுள்ளார்.