'யுக்ரேன் மீது ரஷ்யா படையெடுத்தால்' - அமெரிக்க தளபதி எச்சரிக்கை
யுக்ரேன் மீது ரஷ்யா படையெடுப்பு நடத்தினால் அது மிகவும் பயங்கரமானதாக இருக்கும் என்று அமெரிக்க பாதுகாப்பு படைகளின் தலைமை தளபதி மார்க் மில்லி தெரிவித்துள்ளார்.
இதனால் பலர் உயிரிழப்பதும் காயமடைவதும் நடக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
யுக்ரேன் எல்லையில் ரஷ்யா சுமார் ஒரு லட்சம் படையினரைக் குவித்துள்ளது, பனிப் போர் காலத்துக்கு பின் அதிக அளவில் படைகள் குவிக்கப்படும் செயல் என்றும் அவர் கூறுகிறார்.
யுக்ரேன் மீது படையடுக்கும் எண்ணம் இல்லை என்று ரஷ்யா தொடர்ந்து மறுத்து வருகிறது.