1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sinoj
Last Updated : புதன், 9 பிப்ரவரி 2022 (00:39 IST)

ஹுண்டாய் சர்ச்சை இடுகை விவகாரம்: கொரிய தூதரிடம் விளக்கம் கேட்ட இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் Social embed from twitter

காஷ்மீர் சுதந்திரம் தொடர்பாக சர்ச்சைக்குரிய வகையில் ஹுண்டாய் பாகிஸ்தான் வெளியிட்ட சமூக ஊடக இடுகை மற்றும் அதன் பின்பு அந்நிறுவனத்தின் இந்திய கிளை வெளியிட்ட விளக்கம் இந்தியாவில் பயனர்கள் மத்தியில் கொந்தளிப்பான சூழலை ஏற்படுத்தியிருக்கிறது.
 
பலரும் அந்த நிறுவனத்தை புறக்கணிக்க வேண்டும் என சமூக ஊடகங்களில் பதிவிட்டு வரும் வேளையில், டெல்லியில் உள்ள கொரிய தூதரை அழைத்து ஹுண்டாய் நிறுவன செயல்பாடு தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை விளக்கம் கேட்டிருக்கிறது.
 
இது தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஹுண்டாய் பாகிஸ்தான் பகிர்ந்த சர்ச்சைக்குரிய பதிவை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், இதனால் இந்திய அரசாங்கம் கடும் அதிருப்தி அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
மேலும் இந்த பிரச்னை இந்தியாவின் ஒருமைப்பாடு சம்பந்தப்பட்டது, எனவே இதில் சமரசம் செய்ய முடியாது என்றும் அதில் கொரிய தூதரிடம் தெரிவிக்கப்பட்டதாக வெளியுறவுத்துறை செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
 
பாகிஸ்தான் ஹுண்டாய் தனது ட்வீட்டில், "பாகிஸ்தானால் வழங்கப்படும் ‘காஷ்மீர் ஒற்றுமை நாள்’ மற்றும் ‘காஷ்மீரில் சுதந்திரத்திற்காக போராடுபவர்களை நினைவுகூர' ஆதரவு தர வேண்டும்" என குறிப்பிட்டு இருந்தது.