ஜப்பான் அனிமேஷன் ஸ்டூடியோவில் தீ வைப்பு : 26 பேர் பலி

jappan
Last Modified வியாழன், 18 ஜூலை 2019 (21:35 IST)

ஜப்பான் நாட்டில் கியோடோ மாகாணத்தில் உள்ள ஒரு ஸ்டூடியோவில் ஒருவர் தீ வைத்த சம்பவத்தில் ஏறக்குறைய 26 பேர் பலியாகியுள்ளனர் என அந்நாட்டின் அவசரப்பிரிவு அதிகாரிகள் கூறியுள்ளனர்.

உள்ளூர் பத்திரிக்கை ஒன்றின்போது கூற்றுப்படி கியோடோ அனிமேஷன் ஸ்டூடியோவிற்குள் நுழைந்த, ஒருவர் அடையாளம் தெரியாத திரவத்தை வீசி நெருப்பை உண்டாக்கினார்.
 
மேலும், இந்த சம்பவத்தில் 12 பேர் காயமடைந்துள்ளனர்.
 
அடையாளம் தெரியாத சந்தேகத்திற்குள்ளானவர் கைது செய்யப்பட்டு காயத்துடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
 
"திரவம் மூலமாக ஒருவர் தீ மூட்டினார்" என கியோடோவின் செய்தி தொடர்பாளர் ஒருவர் ஏஎஃப்பியிடம் கூறியுள்ளார். அவரை பற்றி வேறு எந்த தகவலும் கிடைக்கவில்லை.
 
காலை சுமார் 10.30 அளவில் நெருப்பு இந்த ஸ்டூடியோவின் 3 மாடிகளிலும் பரவியது.

இதில் மேலும் படிக்கவும் :