செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 18 ஜூலை 2019 (21:26 IST)

40 கி.மீ நடந்து சென்று காவல்நிலையத்தில் புகார் அளித்த நபர் :பரபரப்பு தகவல்

சட்டீஸ்கர் மாநிலம் கார்ம்சாரியா கிராமத்தில் வசித்து வருபவர் புட்டு ராம்.   இவரது  மனைவி இவரை விட்டுப் பிரிந்து சென்று வேறொருவருடன் குடும்பம் நடத்தி  வருகிறார். 
இந்நிலையில்  சிலவருடங்களாக புட்டு ராம் தனியாக இருந்து வருவதாகத் தெரிகிறது. இதனால் மனமுடைந்து காணப்பட்ட அவர் , தன் மனையிடம் வளரும் குழந்தைகளையாவது தன்னிடம் திருப்பி அனுப்பிவைக்கக்கோரி காவல் நிலையத்திற்குச் சென்று புகார் அளிக்க திட்டமிட்டார்.. 
 
ஆனால் அந்த காவல் நிலையம் இவர் வசிக்கும் பகுதியில் இருந்து  சுமார் 40 கிமீ தொலைவில் இருந்தது. அதனால் நிச்சயமாகப் பேருந்து மூலமாகத் தான் செல்ல வேண்டும் என்ற நிலையிருந்தது. 
 
இந்நிலையில் அவரிடம் கையில் காசும் இல்லாததால் இருநாட்களாக கால்களால் நடந்தே பயணம் செய்து காவல் நிலையத்தில் புகாரளித்தார். இதனைக்கேட்ட  காவல் அலுவலர்கள் அவரது  வாங்கிப் புகாரைப் பதிவு செய்த பின் அவர் ஊருக்குப் போகத்தேவையான  பணம் கொடுத்துள்ளனர். புகார் கொடுப்பதற்காக சுமார் 40 கிலோ மீட்டர் நடந்தே சென்ற புட்டுராம் மலைவாழ் மக்களைச் சேர்ந்தவர். அங்குள்ளா மக்கள் பேருந்துக்கு மிகவும் கஷ்டப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகிறது.