1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Papiksha
Last Updated : புதன், 18 செப்டம்பர் 2019 (18:39 IST)

இ-சிகரெட் தயாரிப்பு, விற்பனை தடை செய்யப்படும் - மத்திய அரசு அறிவிப்பு

இ-சிகரெட் தயாரிப்பு மற்றும் விற்பனைக்கு நாட்டில் உடனடியாக தடை விதிக்கப்படுவதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.


 
நாகரீகம் மற்றும் ஸ்டைல் அடையாளமாக கருதப்படும் இ-சிகரெட் பயன்பட்டால் பள்ளி மாணவர்கள், இளைஞர்களின் உடல்நலன் பாதிக்கப்படுவதால் இந்த தடை விதிக்கப்படுகிறது என்று நிர்மலா சீதாராமன் கூறினார்.
 
மாணவர்கள் இ-சிகரெட் பயன்படுத்துவது 77 சதவீதம் அதிகரித்துள்ளது என்று தெரிவித்த மத்திய அமைச்சர், இ-சிகரெட் தயாரிப்பு, விற்பனை, விநியோகம், ஏற்றுமதி, இறக்குமதி, விளம்பரம் என இது தொடர்பான அனைத்து அம்சங்களுக்கும் தடை விதிக்கப்படுவதாக கூறியுள்ளார்.
 
இ-சிகரெட் பயன்பாட்டுக்கு தடை விதிக்க மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் மேலும் தெரிவித்துள்ளார்.
 
பார்ப்பதற்கு சிகரெட்டைப் போலவே இருக்கும் இ-சிகிரெட்டின் உள்ளே நிகோடின் திரவம் நிரப்பப்பட்ட குப்பி இருக்கும். இதைச் சூடுபடுத்தும் சிறு கருவியும் பேட்டரியும் இருக்கும்.


 
இளைஞர்கள் மற்றும் புகைப்பழக்கத்தில் இருந்து முழுமையாகf விடுபட முடியாதவர்கள் இ-சிகிரெட்டை பெரும்பாலும் பயன்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.