1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 11 செப்டம்பர் 2019 (16:18 IST)

#SayItLikeNirmalaTai: டிவிட்டரில் நிர்மலாவை வாரிவிடும் நெட்டிசன்கள்!

டிவிட்டரில் #SayItLikeNirmalaTai என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தி இணையவாசிகள் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை கலாய்த்து வருகின்றனர். 
 
மக்களவையில் மீண்டும் பாஜக பொறுப்பேற்று 100 நாட்கள் ஆகிவிட்டன. இந்த 100 நாட்களில் மத்திய அரசு செய்த சாதனைகள் என்ன என்பதை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிக்கையாக வெளியிட்டு பேசினார்.
 
அதில், முக்கியமாக ஆட்டோமொபைல் நிறுவனங்களின் வீழ்ச்சியை குறித்து பேசினார். அவர் கூறியதாவது, ஆட்டோமொபைல் வீழ்ச்சியால் 3 லட்சம் பேருக்கு மேல் வேலையிழந்துள்ள நிலையில், நிறுவனங்களும் தங்கள் வேலை நாட்களை குறைத்து கொண்டு ஃபேக்டரிகளை மூட தொடங்கியுள்ளன. 
இதற்கு மத்திய அரசின் முறையற்ற வரி நடவடிக்கைகளே காரணம் என எதிர்கட்சிகள் எதிர்ப்புகளை தெரிவித்துள்ளன. ஆனால், ஆட்டோமொபைல் நிறுவனங்கள் சந்தித்து வரும் வீழ்ச்சியானது பிஎஸ்6 வகை எஞ்சின்களை நடைமுறைக்கு கொண்டு வர இருப்பதாலும், குறிப்பிட்ட கால இடைவேளையில் ஏற்படும் தேக்க நிலையாலும்தான். 
 
இப்போது வாகனங்கள் வாங்குவதை விட ஊபர் மற்றும் ஓலா போன்றவற்றில் வாகனங்களை புக்கிங் செய்து செல்வதும் ஒரு காரணம் என்று கூறினார். ஓலா மற்றும் ஊபர் பற்றி அவர் குறிப்பிடத்தை பிடித்துக்கொண்ட இணையவாசிகள் சகட்டு மேனிக்கு கலாய்த்து வருகின்றனர். 
#SayItLikeNirmalaTai மற்றும் #BoycottMillennials என்ற ஹேஷ்டேக்கின் கீழ், 
  • விவாகரத்து அதிகமாவதற்கு காரணம் மக்கள் திருமணம் செய்து கொள்வதுதான்
  • மக்கள் காஃபி குடிப்பதால்தான் தேநீர் விற்பனை தொழில் பாதித்துள்ளது
  • மக்கள் ஓயோ ரூம்களை பயன்படுத்துவதால், ரியல் எஸ்டேட் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது
  • ஸ்கைப் கால் வழியாக அனைத்து சந்திப்புக் கூட்டங்களும் நடப்பதால், ஏர் இந்தியா நஷ்டமானது - போன்ற பல கமெண்டுக்களை போட்டு கிண்டலடித்து வருகின்றனர்.