1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Modified: புதன், 3 ஏப்ரல் 2019 (08:30 IST)

பிரதமரின் செல்வாக்கு சரிகிறதா? என்ன சொல்கிறது புள்ளி விவரம்...

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது கட்சியிலிருந்து இரண்டு பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களை நீக்கி உள்ளார். அவர்கள் இருவரும் எஸ்.என்.சி-லாவ்லின் எனும் ஒரு பெருநிறுவனத்திற்கு எதிரான கிரிமினல் விசாரணையில் ஜஸ்டின் தலையிடுகிறார் என குற்றஞ்சாட்டி, அதனை அம்பலப்படுத்தியவர்கள்.
 

ஜோடி வில்சன் மற்றும் ஜானெ பில்போட் ஆகிய இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஜஸ்டின் அரசு மீது குற்றஞ்சாட்டி தங்களது பதவியை ராஜிநாமா செய்துவிட்டனர். விரைவில் தேர்தல் நடக்க இருக்க சூழ்நிலையில் ஜஸ்டினின் தாராளவாத கட்சியிலிருந்து அவர்ஜள் நீக்கப்பட்டுள்ளனர்.

ஒரு முறைகேட்டை அம்பலப்படுத்திய இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களை நீக்கியதன் மூலம் ஜஸ்டின் நீதிக்கு துரோகம் இழைத்துவிட்டார் என்கிறார் எதிர்க்கட்சி தலைவர் ஆண்ட்ரூ ஸ்சேர்.

பொதுத் தேர்தல் நெருங்கிவரும் சூழலில் புள்ளிவிவரத்தில் கடந்த சில மாதங்களாக ட்ரூடோவுக்கு மக்களிடையே உள்ள ஆதரவு குறைந்து வருகிறது.

லிபியாவில் சில தொழில் ஒப்பந்தங்களைப் பெற அந்நாட்டு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாக எஸ்.என்.சி-லாவ்லின் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.