1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. உலக கோப்பை கிரிக்கெட் 2019
  4. 240 is the target to India in World cup semi final

இந்தியாவுக்கு 240 ரன்கள் இலக்கு: அடுத்தடுத்து விக்கெட்டுக்கள் விழுவதால் இந்தியாவுக்கு சிக்கலா?

இந்தியா
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் நேற்று அரையிறுதி போட்டியில் மோதிய நிலையில் நேற்று மழை காரணமாக 46.1 ஓவரில் போட்டி நிறுத்தப்பட்டது
 
இதனையடுத்து இன்று ரிசர்வ் டே போட்டி 46.2வது ஓவரில் இருந்து தொடங்கியது. போட்டி ஆரம்பித்தவுடன் 7 பந்துகளில் 3 விக்கெட்டுக்கள் விழுந்ததால் நியூசிலாந்து அணியால் அதிக ரன்கள் குவிக்க இயலவில்லை. இறுதியில் 50 ஓவர்களில் நியூசிலாந்து அணி 8 விக்கெட்டுக்களை இழந்து 239 ரன்கள் மட்டுமே எடுத்தது. புவனேஷ்குமார் 3 விக்கெட்டுக்களையும், பும்ரா, ஹர்திக் பாண்ட்யா, ஜடேஜா மற்றும் சஹால் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். மழைக்கு பின் நடந்த போட்டியில் அடுத்தடுத்து விக்கெட்டுக்கள் விழுந்துள்ளதால் இந்திய அணி பேட்ஸ்மேன்கள் கவனத்துடன் விளையாட வேண்டும் என வர்ணனையாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.,
 
இந்த நிலையில் போட்டி தொடங்கி ஒருசில நிமிடங்களே ஆகியுள்ளதால் இந்திய அணி இன்னும் ஒருசில நிமிடங்களில் களமிறங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 240 ரன்கள் என்ற இலக்கை விரைவில் எட்டி, இறுதி போட்டிக்கு இந்தியா தகுதி பெறுமா? என்பது இன்னும் மூன்று மணி நேரங்களில் தெரிந்து விடும்
அடுத்த கட்டுரையில்
ஆரம்பமே அதிர்ச்சி – ரோஹித் , கோஹ்லி & ராகுல் ஏமாற்றம் !