1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By sinoj kiyan
Last Modified: வியாழன், 5 டிசம்பர் 2019 (21:16 IST)

டிரம்ப் மீதான பதவி நீக்க தீர்மான நடவடிக்கைகள் தொடங்குகின்றன - நான்சி பெலோசி

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு எதிராக அவர் மீது பதவி நீக்க தீர்மானத்தை பிரதிநிதிகள் அவை கொண்டுவரவுள்ளதாக அந்த அவையின் சபாநாயகரான நான்சி பெலோசி தெரிவித்துள்ளார்.
ஜனநாயக கட்சியை சேர்ந்த நான்சி பெலோசி இது குறித்து கூறுகையில், ''அதிபர் மீதான பதவி நீக்க தீர்மானம் குறித்த நடவடிக்கைகளை தொடங்கிட பிரதிநிதிகள் அவையின் தலைவரை நான் இன்று கேட்டுக்கொள்கிறேன்'' என்று தெரிவித்தார்.
 
பிரதிநிதிகள் அவையின் முக்கிய கமிட்டி அமைப்பு டிரம்புக்கு எதிரான குற்றச்சாட்டுகளை விசாரிப்பது குறித்த பரிசீலனை செய்து கொண்டிருப்பதாக செய்தி வந்த மறுநாளில் இந்த கருத்தை நான்சி பெலோசி வெளியிட்டுள்ளார்.
 
தன் மீது பதவிநீக்க தீர்மானம் கொண்டு வருவதாக இருந்தால் அதனை விரைவாக நடத்துமாறு ஜனநாயக கட்சியிடம் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
 
டிரம்ப் பதவி நீக்கம்: முக்கிய தீர்மானம் நிறைவேறியது
 
அரசியல் எதிராளியை வீழ்த்த வெளிநாட்டு நபரிடம் உதவி கேட்டாரா அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்?
நான்சி பெலோசியின் மேற்கூறிய கருத்துக்கள் வெளிவருவதற்கு சற்று முன்னர் தனது ட்விட்டர் பதிவில் கருத்து வெளியிட்ட டொனால்ட் டிரம்ப், ''என் மீது நீங்கள் பதவி நீக்க தீர்மானம் கொண்டு வருவதாக இருந்தால், அதனை விரைவாக, உடனடியாக கொண்டு வாருங்கள். அப்போதுதான் செனட்டில் நியாயமான விசாரணை நடக்க வாய்ப்பு இருக்கும். நாட்டு மக்களும் தங்களின் வழக்கமான கடமையை செய்வதற்கு ஏதுவாக இருக்கும்'' என்று தெரிவித்தார்.
 
நவம்பர் மாத தொடக்கத்தில் டொனால்ட் டிரம்பை பதவி நீக்குவது தொடர்பான நடைமுறைகளை தொடங்கும் தீர்மானம் அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் அவையில் நிறைவேறியது,
 
டிரம்பின் பதவி நீக்கம் தொடர்பான விசாரணை படிப்படியாக எப்படி வெளிப்படையாகும் என்பது நிறைவேற்றப்பட்டுள்ள இந்த தீர்மானத்தில் விவரிக்கப்பட்டது.
 
டிரம்ப் மீது விசாரணை ஏன்?
 
அமெரிக்காவின் உளவுப்பிரிவைச் சேர்ந்த ஒருவர், அதிபர் டிரம்ப் உக்ரைன் நாட்டை சேர்ந்த அரசியல் தலைவரான ஜெலன்ஸ்கியுடன் தொலைப்பேசி உரையாடல் மேற்கொண்டதாக முறையாகப் புகார் வைத்ததைத் தொடர்ந்து இந்த சர்ச்சை எழுந்தது.
 
நான்சி பெலோசி மற்றும் அதிபர் டொனால்ட் டிரம்ப்
இவர்கள் இருவரும் தொலைப்பேசியில் என்ன பேசினார்கள் என்பது கூறப்படவில்லை, ஆனால் அதிபர் டிரம்ப் முன்னாள் அமெரிக்கத் துணை அதிபரான ஜோ பிடென் மற்றும் அவரது மகன் ஹண்டர் ஆகிய இருவர் மீதும் உக்ரேன் விசாரணை செய்ய வேண்டும் என்றும் , அவ்வாறு செய்யவில்லையெனில் அந்நாட்டுக்கு அழைத்து வரும் ராணுவ உதவியை அமெரிக்கா நிறுத்திவிடும் என்று அச்சுறுத்தியதாகவும் ஜனநாயக கட்சியின் குற்றஞ்சாட்டுகின்றனர்.
 
ஜனநாயக கட்சியைச் சேர்ந்த மூத்த உறுப்பினரும், பிரதிநிதிகள் சபையின் சபாநாயகருமான நான்சி பெலோசி, அதிபர் டிரம்ப் 'இதற்குப் பொறுப்பேற்க வேண்டும்' என்று முன்னதாக தெரிவித்தார்.
 
தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை அப்போது மறுத்த அதிபர் டிரம்ப், ஜனநாயக கட்சியினரின் முயற்சிகளை ''குப்பை'' என்று வர்ணித்தார்.