செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By sinojkiyan
Last Modified: திங்கள், 11 நவம்பர் 2019 (20:34 IST)

அமெரிக்க அதிபர் டிரம்பை பார்த்து, விடாமல் குரைத்த நாய் ! வைரல் வீடியோ

சமுக வலைதளங்களில் ஆதிக்கம் தற்போது மிகுந்து காணப்படுகிறது. அதனால், உலகில் ஒரு இடத்தில் நடப்பது அடுத்த நொடியே உலகில் உள்ள மற்ற எல்லா நாடுகளுக்கும் மக்களுக்கும் பரவுகிறது. 
இந்நிலையில் டுவிட்டர் வாசியான, ராபர்ட் டி நீரோ என்பவர் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார். அதில், ஒரு தவறான நபர் என்பது அறிவியல் பூர்வமாக நிரூபணமாகியது என பதிவிட்டு, ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார். 
 
அதில், தொலைக்காட்சியில் அமெரிக்க அதிபர் டிரம்ப் பேசிக்கொண்டிருக்கும்போது, வீட்டில் இருக்கும் நாய், மற்றும் அதன் குட்டி அவரைப் பார்த்துக் குரைத்துக் கொண்டிருக்கிறது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஆனால், அந்த நாய்கள்  என்ன காரணத்துக்கான குரைத்தது என்பது யாருக்கும் தெரியவில்லை.