கொகோ கோலா: சமூக ஊடகங்களில் விளம்பரம் செய்வதை நிறுத்தியது ஏன்?
சர்வதேச குளிர்பான நிறுவனமான கொகோ கோலா சமூக ஊடகங்களில் விளம்பரம் செய்வதை 30 நாட்களுக்கு நிறுத்துவதாக அறிவித்துள்ளது.
வெறுப்பு கருத்துகள் சமூக ஊடகங்களில் பகிரப்படுவதற்கு எதிரான பிரசாரம் சர்வதேச அளவில் எழுந்துள்ளது. சமூக ஊடக நிறுவனங்களுக்கு இந்த விஷயத்தில் பொறுப்பு இருக்கிறது. அவர்களது தளத்தில்தான் இந்த கருத்துகள் பகிரப்படுவதால், இதற்கு எதிரான நடவடிக்கையை அவர்கள் எடுக்க வேண்டும் என்று பலரும் கோரி வருகின்றனர்.
ஃபேஸ்புக் நிறுவனர் மார்க்கும் சமீபத்தில், குறிப்பிட்ட சமூகத்தை, இனத்தை, மதத்தை, சாதியை, தேசத்தை, பாலினத்தை சிறுமைப்படுத்தும் அல்லது அச்சுறுத்தும் விளம்பரங்கள் தடை செய்யப்படும் என அறிவித்தார்.
இந்த சூழலில் கோலா நிறுவனம், “இனவாதத்திற்கு இந்த உலகத்திலும் இடமில்லை, சமூக ஊடகங்களிலும் இடமில்லை,” என்று கூறி உள்ளது. சமூக ஊடக நிறுவனங்கள் இந்த விஷயத்தில் உறுதியான நடவடிக்கை எடுக்கவும், அவர்களை பொறுப்பாக்கவும் அழுத்தம் தருவதற்காக முப்பது நாட்களுக்கு சமூக ஊடகங்களில் விளம்பரம் செய்வதை நிறுத்த கோலா நிறுவனம் முடிவு செய்துள்ளது.