செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 24 மே 2020 (10:22 IST)

என்னது சிக்கிம் தனிநாடா? தவறாக விளம்பரம் செய்த அதிகாரியை சஸ்பெண்ட் செய்த கெஜ்ரிவால்!

டெல்லி அரசு வெளியிட்ட அறிவிப்பு ஒன்றில் சிக்கிம் மாநிலத்தை தனிநாடு என்று குறிப்பிட்டிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சிவில் பாதுகாப்பு படைக்கான தன்னார்வலர்கள் தேர்வுக்கான அறிவிப்பை டெல்லி அரசு பத்திரிக்கைகளில் வெளியிட்டிருந்தது. அதில் சிக்கிம் தனி நாடு என்னும் பொருள்படும்படி வாசகங்கள் இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள சிக்கிம் தலைமை செயலர் ”பெரிய நாட்டின் குடிமக்கள் என்று பெருமைபட்டு கொள்ளும் சிக்கிம் மக்களுக்கு இந்த விளம்பரம் வேதனையை ஏற்படுத்துகிறது. சிக்கிம் மக்களின் உணர்வுகளை மதித்து டெல்லி அரசு வேறு விளம்பரத்தை வெளியிட வேண்டும்” என கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்த விவகாரம் குறித்து விளக்கமளித்துள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் , சர்ச்சைக்குள்ளான விளம்பரத்திற்கு வருத்தம் தெரிவிப்பதாகவும், விளம்பரம் திரும்ப பெறப்பட்டு அதற்கு காரணமாக அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.