1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 20 ஏப்ரல் 2020 (12:41 IST)

முஸ்லீம்களுக்கு அனுமதி கிடையாது!: விளம்பரம் செய்த மருத்துவமனை மீது வழக்கு!

உத்தர பிரதேசத்தில் முஸ்லீம் நோயாளிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்த பிறகே மருத்துவமனையில் அனுமதி அளிப்பதாக விளம்பரம் செய்த மருத்துவமனை மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் உள்ளது. சமீபத்தில் இஸ்லாமிய மாநாட்டில் பங்கேற்றவர்களுக்கு கொரோனா இருந்ததை ஊடகங்களும், அரசும் மத ரீதியாக அணுகியிருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் அதற்கு இந்திய அரசு மறுப்பு தெரிவித்திருந்தது.

இந்நிலையில் உத்தர பிரதேசத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் முஸ்லீம் நோயாளிகள் மற்றும் அவர்கள் உடனிருப்பவர்கள் கொரோனா சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பிறகே மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவர் என உள்ளூர் ஊடகத்தில் விளம்பரம் வெளியிட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சம்பந்தப்பட்ட மருத்துவமனையின் உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 20 சதவீதம் இஸ்லாமிய மக்கள் வாழும் உத்தர பிரதேசத்தில் தனியார் மருத்துவமனை மதரீதியான அணுகுமுறையை பேணியது தவறு என சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.