புதன், 13 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sasikala
Last Modified: செவ்வாய், 21 ஜூலை 2020 (11:02 IST)

பருவநிலை மாற்றம்: 2100ஆம் ஆண்டுக்குள் பனிக்கரடிகள் அழிந்து போகலாம்

பருவநிலை மாற்றத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்காவிடில், 2100ஆம் ஆண்டிற்குள் பனிக்கரடிகள் இல்லாமல் போகலாம் என்கிறது ஆய்வு ஒன்று. ஆர்க்டிக் பகுதியில் உள்ள பனி உருகி வருவதால் ஏற்கனவே பல உயிரினங்கள் அழிந்துவிட்டன.

சீல்களை வேட்டையாடி உண்பதற்கு பனிக்கரடிகள் ஆர்க்டிக் பெருங்கடலை நம்பியிருக்கின்றன. பனி உருகினால், இந்த விலங்குகள் உணவைத் தேடி நீண்ட தூரத்திற்கு செல்ல நேரிடும் அல்லது கரைக்கு வரக்கூடும்.
 
"பனிக்கரடிகள் உலகின் உச்சிப் பகுதியில்தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றன எனவே இந்த பனிப்பாறைகள் உருகிவிட்டால் அவை போவதற்கு எந்த இடமும் இல்லை," என்கிறார் கனவின் ஓண்டாரியாவில் உள்ள டுரோண்டோ பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆய்வாளர் பீட்டர்.
 
பருவநிலை மாற்றத்திற்கான விளைவை இந்த விலங்குகள் சந்திக்க நேரிடும் என்கிறார் பீட்டர்.
 
பனிக்கரடிகளை அழிவின் விளிம்பில் இருக்கும் விலங்குகளின் பட்டியலை சேர்த்துள்ளது இயற்கை பாதுகாப்பிற்கான சர்வதேச ஒன்றியம். மேலும் பனிக்கரடிகளின் அழிவிற்கு முக்கிய காரணமாக பருவநிலை மாற்றம் இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது.