திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 28 மார்ச் 2020 (12:49 IST)

உயிர்க்கொல்லி கொரோனா: கேராளவில் முதல் மரணம், தமிழகத்தில் இன்று மட்டும் 3!

கொரோனா பாதிப்பால் இன்று கேராளவில் முதல் மரணம் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

 
உலகம் முழுவதிலும் பல்லாயிரக்கணக்கான உயிர் பலிகளை ஏற்படுத்திய கொரோனா தற்போது இந்தியாவிலும் தீவிரமாக பரவ துவங்கியுள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள போதிலும் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.    
 
நேற்று வரை இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 748 ஆக இருந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 906 ஆக உயர்ந்துள்ளது. இது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது. 
 
இந்நிலையில், கன்னியாகுமரி அரசு மருத்துவமனையின் கொரோனா வார்டில் இறந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்தவர்களில் 3 பேர் இன்று ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர். 
 
இதேபோல கேரளாவில் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்றுவந்த முதியவர் ஒருவர் உயிரிழந்துள்லார். இது கேரளாவில் பதிவு செய்யப்பட்டுள்ள முதல் மரணமாகும். 69 வயதான் இவர் எர்ணாகுளம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இவருக்கு ஏற்கனவே உயர் ரத்த அழுத்தம் மற்றும் இதய நோய்கள் இருந்ததாக மருத்துவர்கள் தகவல் வெளியிட்டுள்ளனர்.