செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By papiksha
Last Updated : சனி, 28 மார்ச் 2020 (16:59 IST)

கொரோனா எந்த விலங்கிடமிருந்து பரவியது? துப்பறியும் கதை போல நீளும் ஆய்வு!

உலகை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ள கொரோனா வைரஸ் எப்படி விலங்களிடமிருந்து மனிதர்களுக்குப் பரவியது என்பதைத் தெரிந்து கொள்ள ஹெலன் பிரிக்ஸ் விஞ்ஞானிகளிடம் சென்றார்.

சீனாவில் ஓர் இடத்தில், வானில் பறந்து கொண்டிருந்த நோய் தொற்று கொண்டிருந்த வௌவால் மேலிருந்து கீழே மலத்தைக் கழித்தது. அது ஒரு காட்டில் விழுந்தது. அங்கேயே இருக்கும் ஒரு விலங்கு, (ஒரு எறும்புத்தின்னி) இரையைத் தேடும்போது அந்த மலத்திலிருந்த வைரஸ் தொற்று அதற்குப் பரவியது. அது காட்டிலிருக்கும் பிற விலங்குகளுக்கும் பரவியது . அந்த விலங்கு ஒரு மனிதரிடம் சிக்கியது எனவே அந்த விலங்கின் மூலம் அந்த மனிதருக்கும் வந்திருக்கலாம்.

பிறகு
 
அவரிடமிருந்து அவரின் வேலையாட்கள் என இப்படி உலகம் முழுவதும் பரவுவது தொடங்கியிருக்கலாம். இவ்வாறு பரவியது உண்மையா எனக் கண்டறிய அனைத்து விலங்குகளையும் பரிசோதனை செய்யத் தொடங்கியுள்ளனர், இது துப்பறியும் கதை போல் உள்ளது என்கிறார் லண்டன் விலங்கியல் பேராசிரியர் அண்ட்ரூ கன்னிங்கம் . ஆனால் விலங்குகளிடமிருந்து பரவியிருக்கலாம். குறிப்பாக வௌவால்கள் தான் இதற்கு முன்பு பரவிய கொரோனா வைரஸின் காரணமாக அமைந்தது என்கிறார்.
சீன விஞ்ஞானிகள் ஒரு நோயாளியிடமிருந்து இந்த வைரஸை கண்டறியும்போது வௌவால்களையும் சோதனை செய்தனர்.

பாலூட்டிகள் பெரும்பாலும் கூட்டமாக வாழும் இயல்புடையவை. பல மைல் தூரங்கள் பறப்பவை. அவை பொதுவாக நோய்க்கு ஆளாகக்கூடியவை இல்லை. ஆனால் வைரஸ்களை பரப்ப அதிகம் வாய்ப்புகள் கொண்டவை.

லண்டன் பல்கலைக்கழக பேராசிரியர் கேட்ஸ் ஜான் கூறுகையில், வௌவால்கள் வைரஸ்களுடன் போராடும் திறன் கொண்டவை. அவை வைரஸால் தாக்கப்பட்டால் தங்களை தாங்களே சரி செய்து கொள்ளும் டிஎன்ஏ கொண்டுள்ளன. இதனால் நோய்களுக்கு உள்ளாவதற்கான முன் அது மீண்டிருக்கலாம். இது இப்போதைக்கு நிலவும் ஒரு கருத்து மட்டுமே என்றார் .

வௌவால்கள் ஒருமுறை வைரஸால் தாக்கப்பட்டால் அது தங்களுக்குள் அந்த வைரஸை வளர்த்துக் கொள்ளும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. வௌவால்கள் பாலூட்டிகள் என்பதால் அவை மனிதர்களுக்கு நேரடியாகவோ அல்லது வேறு சில விலங்குகளின் மூலமாகவோ பரப்பி இருக்கலாம் என்கிறார் நாட்டிங்கம் பல்கலைக்கழக பேராசிரியர் ஜோனாதன் பால்.

இந்த புதிரில் அடுத்து சந்தேகப்படும் விலங்கு எறும்புத்தின்னி. உலகம் முழுவதும் மிகச் சுலபமாக மக்கள் இருக்கும் இடங்களுக்கு வரக்கூடிய விலங்கு. அது மட்டுமல்லாமல் இது அழியக்கூடிய நிலையில் உள்ளது . ஆசியாவில் எறும்புத் திண்ணிக்கு கடும் தேவை இருக்கிறது. சீனாவின் பாரம்பரிய மருந்து ஒன்றைத் தயாரிக்க இவை தேவைப்படுகின்றன. மேலும் இதன் இறைச்சியைச் சீனாவில் பலரும் உண்பர்.