இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் மே 28 அன்று, இடைத்தேர்தல் மற்றும் ஒத்திவைக்கப்பட்ட தேர்தல் நடத்தப்பட்டது. 11 சட்டமன்றத் தொகுதிகளில் நடத்தப்பட்ட தேர்தல்களில், ஆளும் பாரதிய ஜனதா கட்சி உத்தராகண்ட் மாநிலம் தராளி தொகுதியில் மட்டுமே வெற்றிபெற்றுள்ளது. பிற தொகுதிகளில் போட்டியிட்ட பாரதிய ஜனதா கட்சி தோல்வியையே தழுவியுள்ளது. இவற்றுடன் உத்தரபிரதேசத்தின் கைரானா, மகாராஷ்டிராவின் பல்கார் மற்றும் பந்தாரா - கோந்தியா மற்றும் நாகலாந்து ஆகிய மக்களவைத் தொகுதிகளுக்கும் இடைத்...