திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 17 ஜூன் 2019 (18:09 IST)

செவ்வாயில் முதல் கிரகப்பிரவேசம் நடத்திய ஜஸ்டின்...!

இறுதியாக மனிதர்கள் செவ்வாய் கிரகத்தில் குடிபெயர்வதற்கு தயாராக உள்ளனர். இதனை அவர்கள் தனியாக செய்ய முடியாது. அவர்களுக்கு அதற்கேற்ற கலை அறிவு திறன் கொண்ட ஜஸ்டின்(ரோபோ) போன்ற டிராய்டுகள் தீவிர சகிப்புத்தன்மை கொண்ட நம்பகமான  நிபுணர்கள் தேவைப்படுகிறது.
ஜெர்மன் விண்வெளி ஏஜென்சி டி.எல்.ஆரால் கட்டப்பட்டது, மனிதர்களுக்கான முதல் செவ்வாய் வாழ்விடத்தை உருவாக்க இதுபோன்ற மனித உருவங்கள்(டிராய்டுகள்) வளர்க்கப்படுகின்றன.
 
பொறியாளர்கள் ஜஸ்டினின் உடல் திறன்களை ஆராய்ந்து வருகின்றனர். அதனால் புகைப்படங்களை படம் பிடிக்க, பதிவேற்றம் செய்ய போன்றவைகளை கையாள முடியும். ஜஸ்டினால்(ரோபோ) தானே சிந்திக்கவும் முடியும்.
 
பெரும்பாலான ரோபோக்களைப் போலல்லாமல், முன்கூட்டியே திட்டமிடப்பட்டு கிட்டத்தட்ட ஒவ்வொரு இயக்கத்திற்கும் வெளிப்படையான  வழிமுறைகளை வழங்க வேண்டும், இந்த ரோபோட் தன்னியக்கமாக சிக்கலான பணிகளைச் செய்ய முடியும். மேலும் ஒரு கிரகத்தின் மேற்பரப்பில் சுற்றுப்பாதையில் விண்வெளி வீரர்களால் கண்காணிக்கப்படும்.
 
ஜஸ்டின் தனது சுற்றுச்சூழலைப் பற்றி ஆய்வு செய்து இயந்திரங்களை சுத்தம் செய்தல் மற்றும் பராமரித்தல், உபகரணங்களை பரிசோதித்தல் மற்றும் பொருட்களை ஏந்திச் செல்வது போன்றவற்றை மேற்கொள்வதாகும். அண்மையில் நடந்த சோதனைகளில், ஜஸ்டின் சிறிய  ஆய்வகத்தில், ஒரு தவறான சோலார் பேனலை நிமிடத்தில் சரிசெய்தது. இவை சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஒரு விண்வெளி வீரரால்  via tablet மூலம் இயக்கப்பட்டது. 
 
ஜஸ்டினுக்கு இது ஒரு சிறிய வேலையாக இருந்தாலும், மனிதனின் எதிர்கால வாழ்க்கைக்கு இது ஒரு மிகப்பெரிய அஸ்திவாரம் தான்.