வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 1 செப்டம்பர் 2022 (14:58 IST)

5ஜி விரைவில் சென்னையில் - உங்கள் மொபைலில் அது வேலை செய்யுமா?

BBC
இந்தியாவில் 5ஜி சேவை விரைவில் அறிமுகமாகவுள்ளது. அக்டோபர் மாதத்திற்குள், நாட்டின் முக்கிய பெரு நகரங்களில் 5ஜி நெட்வொர்க் இணைப்பு கிடைக்கும். சமீபத்தில் 5ஜி சேவைக்கான அலைக்கற்றை ஏலம் விடப்பட்டதில் இருந்து, அந்த சேவையைப் பெறும் எதிர்பார்ப்பில் வாடிக்கையாளர்கள் உள்ளனர்.

இந்த நிலையில், ஏர்டெல் நிறுவனம் தனது 5ஜி சேவையை அக்டோபர் மாதத்தில் தொடங்குவதாக தெளிவுபடுத்தியுள்ளது. Vi அதாவது வோடாஃபோன் ஐடியா, மற்ற 5ஜி ஆபரேட்டர்களிடமிருந்து வேறுபட்ட திட்டத்தை அறிவிக்கவிருக்கிறது.

5ஜி சேவை அறிமுகமாகும் முன்பே அது பற்றிய பல கேள்விகள் வாடிக்கையாளர்கள் மத்தியிலும் மக்கள் மனங்களிலும் எழுந்துள்ளன. உதாரணமாக, தற்போது 4ஜி சேவை அல்லது 3ஜி சேவை பெறும் வாடிக்கையாளர் தங்கள் செல்பேசியிலேயே 5ஜி சேவையைப் பெறமுடியுமா? அல்லது இதற்காக அவர்கள் தங்கள் செல்பேசியை மாற்றவேண்டுமா? புதிய சிம் கார்டு வாங்கவேண்டுமா? என்பவை மக்களுக்கு எழும் சில முக்கியமான கேள்விகள்.

இது போன்ற சில கேள்விகளையும் அவற்றுக்கான பதில்களையும் இங்கே வழங்குகிறோம்.

1. 5G என்றால் என்ன?

5ஜி என்பது 5-ம் தலைமுறை தொலைத்தொடர்பு சேவை. 4ஜி சேவை மொபைல் பிராட்பேண்டை சாத்தியப்படுத்திய நிலையில், 5ஜி தொழில் நுட்பத்தில் இணைய வேகம் மேலும் அதிகமாக இருக்கும் என்பது உண்மை. ஆனால், 5ஜி என்பது இணைய வேகம் தொடர்பானது மட்டுமே அல்ல. லேட்டன்சி என்று அறியப்படும், தரவுப் பறிமாற்றம் தொடங்குவதற்கு முன்பு நிலவும் சில நொடி தமாதம் 5ஜி தொழில்நுட்பத்தில் கிட்டத்தட்ட இருக்கவே இருக்காது என்று கூறப்படுகிறது.

பல்வேறு கருவிகள், பொருள்களையும் இணைக்கும் வகையில் 5 ஜி தொழில்நுடம் இருக்கும். அந்த வகையில் மருத்துவம், போக்குவரத்து போன்ற பல துறைகளில் இந்த தொழில்நுட்பத்தின் தாக்கம் இருக்கும்.

2. எந்த ஃபோன்களில் 5G செயல்படும்?

கிட்டத்தட்ட அனைத்து பிராண்டுகளும் 5ஜி சேவையை வழங்கக் கூடிய திறன்பேசிகளை அறிமுகப்படுத்தியுள்ளன. ஆனால், 4ஜி திறன்பேசிகளில் இந்த சேவையின் பலனை நீங்கள் பெற இயலாது. அதற்கு உங்களிடம் குறைந்தபட்சம் 5ஜி திறன்பேசி இருக்க வேண்டும். தற்போது 5ஜி அலைக்கற்றை ஏலம் விடப்பட்டுள்ளதால், புதிய செல்பேசிகளில் 5ஜி அலைக்கற்றை வசதி வருமா என நீங்கள் கவலைப்படத் தேவையில்லை.

3. அப்படியானால் நீங்கள் புதிய போன் வாங்க வேண்டுமா?

தற்போதைய செல்பேசியின் சமீபத்திய அறிமுகத்தைப் பொறுத்து இது அமையும். ஏற்கெனவே 3ஜி சேவைக்கான வாய்ப்பை பெற்றுள்ள பழைய செல்பேசியில் 4ஜி சேவை இயங்காது. அதுபோலவே, 3ஜி சேவை செல்பேசிகளில் 5ஜி சேவையை பெற முடியாது. உங்களிடம் 5ஜி நெட்வொர்க்கை பெறக் கூடிய செல்பேசி அல்லது திறன்பேசி இருந்தால் புதிதாக திறன்பேசி வாங்கும் தேவை இருக்காது.

ஒரு சில பிராண்டுகளில் 4G / 3G உடன் 5G விருப்பம் இருக்கும். இதைச் செய்ய நீங்கள் சிஸ்டம்> நெட்வொர்க்> மொபைல் நெட்வொர்க்> நெட்வொர்க் பயன்முறைக்குச் செல்ல வேண்டும். அதுவே 5G வசதி செல்பேசியில் இல்லை என்றால், நீங்கள் புதிய திறன்பேசியை வாங்கினால் மட்டுமே புதிய சேவையின் பலனை அனுபவிக்க முடியும்.

4. புதிய சிம் கார்டும் வேண்டுமா?

இல்லை, 5G சேவைக்கு நீங்கள் புதிய சிம் கார்டை வாங்க வேண்டியதில்லை. உங்கள் தற்போதைய சிம் கார்டில் 5G இணைப்புக்கான வசதி கிடைக்கும். நீங்கள் புதிய சிம் கார்டை வாங்கும்போது சம்பந்தப்பட்ட தொலைத்தொடர்பு நிறுவனங்கள் உங்களுக்கு 5ஜி சிம் வழங்கவும் வாய்ப்புள்ளது.

5. 5ஜி டேட்டா பிளான் கட்டணம் அதிகமாக இருக்குமா5ஜி திட்டங்களின் கட்டணம் எவ்வளவு வரம்புக்குள் இருக்க வேண்டும் என்பதை தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இன்னும் வெளியிடவில்லை. ஆனால் 4ஜியை விட அதிகம் பணம் செலவழிக்க வேண்டியிருக்கும். இது பற்றிய உறுதியான தகவல்கள் தற்போதைக்கு இல்லை.

6. 5ஜி வசதியை அணுகுவதால் என்ன மாறும்5ஜி நெட்வொர்க் வந்த பிறகு, ஒரே நாளில் எந்த மாற்றமும் நிகழாது. வாடிக்கையாளருக்கு ஒரே ஆதாயமாக சிறந்த தரத்தில் அழைப்புகளை பெற முடியும். 5ஜி அலைக்கற்றை உள்ள நகரங்களில் சிறந்த இணைப்பைப் பெறத் தொடங்குவீர்கள். இது தவிர இணைய வேகம் அதிகரிக்கும். 4ஜியில் 100எம்பிபிஎஸ் வேகத்தைப் பெற்றால், 5ஜியில் 1ஜிபிபிஎஸ் வேகத்தை வசதியாக பெறுவீர்கள்.

7. வைஃபை தேவை முடிவுக்கு வருமா?

5ஜி வந்த பிறகு வைஃபை வசதி தேவைப்படாது. காரணம், வைஃபை சந்தையில் அது சில விளைவுகளை ஏற்படுத்தலாம், அதே சமயம், எல்லா இடங்களில் 5ஜி சேவை வழங்கப்படவில்லை என்பதால் வைஃபை வணிகம் 5ஜி வரவால் முடிவுக்கு வராது.

8. இந்தியாவில் முழுவதும் எப்போது சேவை கிடைக்கும்?

முதல் கட்டமாக, தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இந்த சேவையை நான்கு மெட்ரோ நகரங்களிலேயே தொடங்குகின்றன. படிப்படியாக அனைத்து பகுதிகளுக்கும் சேவை விரிவுபடுத்தப்படும். ஜியோ தனது 5ஜி சேவையை டிசம்பர் 2023க்குள் நாடு முழுவதும் விரிவுபடுத்தும் என்று கூறியிருக்கிறது.

9. 4ஜி முடிவுக்கு வருமா?5ஜி வந்த பிறகு 4ஜி சேவை முடிவுக்கு வரும் என பலரும் கருதுகின்றனர். இப்போது 4G மற்றும் 3G சேவையை இரண்டும் கிடைக்கவே செய்கிறது. அதுபோலவே, 4ஜி, 5G சேவை இரண்டும் கிடைக்கும்.

10. 5G புதிய உலகிற்கு வழி திறக்குமா?

தொலைத்தொடர்புத்துறையில் 5ஜி சேவை ஒரு புரட்சியாக பார்க்கப்படுகிறது. அதன் வருகையால், உங்களைச் சுற்றி பல மாற்றங்கள் நிகழலாம். உதாரணமாக, நீங்கள் முற்றிலும் மாறுபட்ட இணைய அனுபவத்தைப் பெறுவீர்கள். இத்துடன் ஐஓடி எனப்படும் இன்டர்நெட் ஆஃப் திங்ஸ் என்ற தேவை அதிகரிக்கும். உதாரணமாக, வீட்டில் பல IoT சாதனங்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரிக்கும். வைஃபை கேமராக்கள் முதல் ஸ்மார்ட் ஸ்பீக்கர்கள் வரை, இது வேகமாக விரிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இதெல்லாம் ஒரே நாளில் நடக்காது. 5ஜி நிறைய புதிய விஷயங்களை கொண்டு வரும், ஆனால் இந்த விஷயங்கள் அனைவரையும் சென்றடைய நேரம் சில காலம் ஆகலாம்.