வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: புதன், 31 ஆகஸ்ட் 2022 (14:31 IST)

கர்ப்பிணி மனைவியை தாக்கிய குடிகார கணவர்..வைரலாகும் வீடியோ

chennai
சென்னை திருவொற்றியூரில் இன்று காலையில்  அரச் மருத்துவமனை ஒன்றில் ஸ்கேன் செய்யக் காத்திருந்த ஒரு 7 மாதக் கர்ப்பிணியை அவரது கணவர் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

7 மாதக் கர்ப்பிணி பெண் இன்று அங்குள்ள மருத்துவமனையில் ஸ்கேன் செய்யக் காத்திருந்தார். அப்போது, வேகமாக வந்த அவரது கணவர் மனோஜ்குமார்’’ ஏன் இவ்வளவு நேரமாகியும் வீட்டிற்கு வரவில்லை’’ என்று பேசி, பலர் முன்னிலையில் அடித்தார். i

பின், அங்கிருந்த மருத்துவரிடமும் அவர் வாக்குவாதம் செய்தார்.  இதுகுறித்து அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸாரிடம் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்த வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.