செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 1 செப்டம்பர் 2022 (13:21 IST)

17 மாவட்டங்களில் இன்று கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

rain
சென்னை உள்பட தமிழகத்தின் முக்கிய பகுதிகளில் மழை பெய்து வரும் நிலையில் இன்று மாலை 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
வட தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று 17 மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது
 
நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், கடலூர் ஆகிய மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யும் என்றும் ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், சேலம், கரூர், நாமக்கல் ,திருச்சி, புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர், சிவகங்கை, மதுரை, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.