1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
  4. 50 killed in Oil tank lorry accident

எண்ணெய் டேங்கர் லாரி விபத்து - 50க்கும் மேற்பட்டோர் பலி

Oil tank
காங்கோவின் மேற்குப்பகுதியில் எண்ணெய் கொண்டுசென்ற டேங்கர் லாரி காரொன்றின் மீது மோதி வெடித்ததில் குறைந்தது 50 பேர் உயிரிழந்தனர்.

 
இந்த சம்பவம் காங்கோவின் தலைநகரான கின்ஷாசா மற்றும் துறைமுக நகரமான மட்டாடி ஆகியவற்றிற்கிடையே உள்ள கிசண்டு என்ற நகரில் நடைபெற்றுள்ளது.
 
இந்த விபத்தில் 50க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாக கூறப்படும் நிலையில், நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு கடுமையான தீக்காயம் ஏற்பட்டுள்ளதாக மத்திய காங்கோ பிராந்தியத்தின் ஆளுநர் அட்டோ மாபுவானா கூறியுள்ளார்.

விபத்து நடந்த இடத்தில் 53 உடல்கள் கருகிய நிலையில் கிடப்பதாக ஏ.எஃப்.பி செய்தி முகமைக்கு கிடைத்த தகவலொன்று தெரிவிக்கிறது.

தீப்பிழம்பினால் பாதிக்கப்பட்டோர் அதிகளவில் ஒரே நேரத்தில் அனுமதிக்கப்பட்டதால் பரபரப்பான சூழ்நிலை நிலவியதாக அருகிலுள்ள மருத்துவமனையை சேர்ந்த மருத்துவர்கள் தெரிவித்தனர்.

அடுத்த கட்டுரையில்
பால் கொடுக்கும் போது வலி ; குழந்தையை கொன்ற தாய் : அதிர்ச்சி செய்தி