செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 3 அக்டோபர் 2018 (11:43 IST)

2000 லெதர் ஜாக்கெட்; 1.60 கோடி –எரிந்து சாம்பல்

சென்னையில் இருந்து ஏற்றுமதிக்காக ஏற்றி செல்லப்பட்ட லெதர் ஜாக்கெட்கள் நிரம்பிய கண்டெய்னர் லாரியில் தீவிபத்து ஏற்பட்டது.

சென்னையை அடுத்த மாங்காட்டில் உள்ள தோல்பொருட்கள் தொழிற்சாலையில் இருந்து பொருட்கள் ஏற்றுமதிக்காக கண்டெய்னரில் ஏற்றிக்கொண்டு செல்லப்பட்டது. அப்போது மாங்காடு கோயிலருகில் மின்கம்பி உரசியதால் தீப்பற்றியுள்ளது. அதை அறியாமல் ஓட்டுனர் வண்டியை மேற்கொண்டு ஓட்டிச் சென்றுள்ளார்.

இதையடுத்து  பூந்தமல்லி நெடுஞ்சாலைக்கு அருகில் சென்றபோது லாரியில் புகை அதிகமாகி வெளியானபோது ஓட்டுனர் அதைக் கவனித்து தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து தீயணைப்புத் துறை வந்து தீயை உடனடியாக அணைத்துள்ளனர்.

லாரியில் இருந்த லெதர் ஜாக்கெட்கள் முழுவதும் தீக்கிரையாகி விட்டன. அதிலிருந்த தோல் பொருட்களின் விலை ஒரு கோடியே அறுபது லட்சம் நிறுவனத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.