செவ்வாய், 18 நவம்பர் 2025
  1. ப‌ல்சுவை
  2. இன்றைய மங்கை
  3. கட்டுரைகள்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 9 ஜூன் 2021 (11:01 IST)

மாதவிடாயின் போது தலைவலி உண்டாக காரணம் என்ன??

மாதவிடாயின் போது தலைவலி உண்டாக காரணம் என்ன??
மாதவிடாயின் போது பெண்களுக்கு வயிறு, முதுகு  மற்றும் இடுப்பு வலியை தவிர்த்து தலை வலியும் ஏற்படுவது ஏன் என தெரிந்துக்கொள்ளுங்கள்... 

 
ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்ட்டிரோன் அளவின் மாற்றங்கள் காரணமாக பெண்கள் தலைவலிக்கு ஆளாகிறார்கள். அதாவது அண்டவிடுப்பின் (ovulation) பின்னர், கருப்பையிலிருந்து முட்டை வெளியேறும் போது, ஹார்மோன் அளவு குறையத் தொடங்குகிறது. ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்ட்டிரோன் பீரியட்ஸ் தொடங்குவதற்கு முன் மிகக் குறைந்த மட்டத்தில் இருக்கும். இதனால் ஹார்மோன்களின் அளவு மேலும் குறைந்து பீரியட்ஸின் போது தலைவலிக்கு வழி வகுக்கிறது. 

தலைவலியை எப்படி குறைக்கலாம்? 
1. 
உடல் பயிற்சி வழக்கத்தை வைத்திருப்பது உங்கள் தலைவலியை சமாளிக்க உதவும். 
2. கோல்டு தெரபி (ஐஸ் மசாஜ்) தலைவலியிலிருந்து நிவாரணம் பெற உதவலாம்.
3. 
காஃபினேட் பானங்களைக் குடித்தால் தலைவலியிலிருந்து நிவாரணம் அளிப்பதில் பயனுள்ளதாக இருக்கும்.
4. 
தலைவலி / ஒற்றைத் தலைவலிக்கு இரவு நல்ல தூக்கம் நிவாரணம் பெற உதவலாம்.
5. 
ஆரோக்கியமான உணவு தலைவலியை சமாளிக்க உதவும்.