1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 7 ஜூன் 2021 (10:51 IST)

கர்ப்பிணிகளுக்கு ஏன் தடுப்பூசி இல்லை - உச்சநீதிமன்றத்தில் வழக்கு

இந்தியாவில் கர்ப்பிணிகளுக்கு தற்போது தடுப்பூசி செலுத்தப்படாதது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒன்றும் தொடரப்பட்டுள்ளது.

 
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது தினசரி பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியுள்ளது. முன்னதாக 2 லட்சத்திற்கும் அதிகமாக இருந்த பாதிப்புகள் தற்போது குறைய தொடங்கியுள்ளது. 
 
தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 1,00,636 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 2,89,09,975 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் கொரோனாவால் கர்ப்பிணிகள் இறப்பது அதிகரித்து வருவதாக கூறப்பட்டுள்ளது. 
 
உலகில் கொரோனா அதிகம் பாதித்துள்ள 20 நாடுகளில் 9 நாடுகளில் கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி போடப்படுகிறது. இதில் 2 நாடுகளில் முன்னுரிமை தரப்பட்டுள்ளது. இந்தியாவில் கர்ப்பிணிகளுக்கு தற்போது தடுப்பூசி செலுத்தப்படாத நிலையில் தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும் என கூறப்பட்டுள்ளது. அதோடு இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒன்றும் தொடரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.