1. செய்திகள்
  2. செய்திகள்
  3. அரசியல் நிலவரம்
  4. OPS team Maitreyan MP protest in front of election commission

தேர்தல் ஆணையத்தின் முன்பு ஓபிஎஸ் ஆதரவு மைத்ரேயன் எம்பி தர்ணா!

தேர்தல் ஆணையத்தின் முன்பு ஓபிஎஸ் ஆதரவு மைத்ரேயன் எம்பி தர்ணா!

தேர்தல் ஆணையம்
அதிமுகவின் இரட்டை இலை விவகாரம், சசிகலாவின் தற்காலிக பொதுச்செயலாளர் பதவி செல்லுமா? செல்லாதா? போன்ற விவகாரங்கள் தற்போது தேர்தல் ஆணையத்தின் முன்னிலையில் உள்ளது. இந்நிலையில் அதிமுகவின் ஓபிஎஸ் அணியை சேர்ந்த மைத்ரேயன் எம்பி தேர்தல் ஆணையத்தின் முன்பு தர்ணாவில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 
 
அதிமுக எங்களுக்கே சொந்தம் என சசிகலா அணியும், ஓபிஎஸ் அணியும் தேர்தல் ஆணையத்தில் மல்லுக்கட்டி வருகிறது. இதில் இரட்டை இலை சின்னமும் முடக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இரு தரப்பினரும் அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் எங்களுக்கு தான் ஆதரவளிக்கின்றனர் என தேர்தல் ஆணையத்தில் பிரமாணப் பத்திரங்களை தாக்கல் செய்து வருகின்றனர்.
 
கடந்த சில தினங்களுக்கு முன்னர் சசிகலா அணி சார்பில் 4 லாரிகளில் தேர்தல் ஆணையத்தில் பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்தனர். இந்நிலையில் ஓபிஎஸ் அணியினரும் தேர்தல் ஆணையத்தில் தங்களுக்கு சாதகமான ஆவணங்களை தாக்கல் செய்ய வந்தனர்.
 
அப்போது தேர்தல் ஆணையத்தில் பாதுகாப்பு பணியில் இருந்து பாதுகாவலர்கள் ஓபிஎஸ் அணியினரின் வாகனங்களை உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. இதனையடுத்து ஓபிஎஸ் அணியின் மைத்ரேயன் எம்பி தேர்தல் ஆணைய அலுவலகம் எதிரே நாற்காலி போட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
About Writer
Caston
அடுத்த கட்டுரையில்
பெற்ற மகளை லாட்ஜில் வைத்து கற்பழித்த தந்தை - திருச்சியில் கொடூரம்