ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. அரசியல் நிலவரம்
Written By Murugan
Last Updated : புதன், 15 நவம்பர் 2017 (11:53 IST)

‘வருங்கால முதல்வர் ஓ.பி.எஸ்’ - கோஷத்தால் டென்ஷனான எடப்பாடி

சமீபத்தில் தேனியில் நடந்த எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா தொடர்பான பொதுக்கூட்டத்தில் ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் எழுப்பிய கோஷம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை டென்ஷன் ஆக்கியுள்ளதாக செய்தி வெளிவந்துள்ளது.


 

 
தர்மயுத்தத்தை கேன்சல் செய்து விட்டு எடப்பாடியுடன் ஓ.பி.எஸ் இணைந்து விட்டாலும், அவர்கள் இருவருக்கும் இடையே இன்னும் புகைச்சல் இருந்துகொண்டுதான் இருக்கிறது என அதிமுக வட்டாரத்தில் கூறப்படுகிறது.
 
வெறும் பேருக்கு துணை முதல்வர் பதவி அளித்துவிட்டு, அவருக்கான அங்கிகாரத்தை எடப்பாடி தராமல் இருக்கிறது என்பது ஓ.பி.எஸ் ஆதரவாளர்களின் ஆதங்கம் எனத் தெரிகிறது.
 
இந்நிலையில், சமீபத்தில் தேனியில் நடைபெற்ற எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் எடப்பாடியும், ஓ.பி.எஸ்-ஸும் கலந்து கொண்டனர். அப்போது,  ஓ.பி.எஸ்-ஸின் ஆதரவாளர்கள் ‘வருங்கால முதல்வர் வாழ்க’ என கோஷம் எழுப்பினர். இதை ரசித்த ஓ.பி.எஸ், சிரித்தவாறே அவர்களை பார்த்து கை அசைத்துள்ளார். மேலும்,  ஒ.பி.எஸ் பேசி முடித்ததும் அவரின் ஆதரவாளர்கள் கும்பலாக அங்கிருந்து கிளம்பிவிட்டனர். தனது சொந்த தொகுதியில் கெத்து காட்டவே ஓ.பி.எஸ் இதையெல்லாம் ஏற்பாடு செய்துள்ளார் எனக் கூறப்படுகிறது.
 
இதையெல்லாம் கவனித்துக்கொண்டிருந்த முதல்வர் பழனிச்சாமி படு டென்ஷன் ஆகிவிட்டாராம். மேலும், தனக்கு நெருக்கமானவர்களிடம் இதுபற்றி புலம்ப ஆரம்பித்துவிட்டார் என செய்திகள் வெளிவந்துள்ளது.