முறைகேடு செய்வதில் ஈபிஎஸ்-ஓபிஎஸ் ‘இரட்டை குழல் துப்பாக்கி’: மு.க.ஸ்டாலின்
நேற்று தேனியில் நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, 'நானும் ஓபிஎஸ் அவர்களும் இரட்டைக்குழல் துப்பாக்கி போல் செயல்பட்டு அரசை வழிநடத்தி வருகிறோம் என்று கூறினார்.
முதல்வரின் இந்த பேச்சு குறித்து கருத்து கூறிய திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், 'ஓபிஎஸ்-ஈபிஎஸ் இரட்டைக்குழல் துப்பாக்கி போல் செயல்படுவது உண்மைதான். ஆனால் அவர்கள் இருவரும் முறைகேடு செய்வதில் ‘இரட்டை குழல் துப்பாக்கி’ போல் செயல்பட்டு வருகின்றனர் என்று கூறினார்.
மேலும் அரசு செலவில் நடைபெற்று வரும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் பெரும்பாலும் அரசியல் மட்டுமே பேசப்படுவதாகவும் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும் மழையைக் காரணம் காட்டி, எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவிற்காக தேனி பகுதி பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு மாணவர்களை எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவுக்கு வரவழைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்