ரூ.200 கோடி வசூலை நெருங்கும் சீன்!.. 5 நாள் கலெக்சன் அப்டேட்!...
கருப்பு, விஸ்வநாத் அண்ட் சன்ஸ் ஆகிய படங்கள் சூர்யாவுக்கு சூப்பர் ஹிட் படங்களாக அமைந்தநிலையில் ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா நடித்த சீன் திரைப்படம் தீபாவளி ரிலீஸாக கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது. சூர்யாவை இதற்கு முன் இப்படி ஒரு கதாபாத்திரத்தில் ரசிகர்கள் பார்த்திருக்கவில்லை என்பதால் அதுவே புதிதாக இருந்தது. அதோடு கதை, திரைக்கதையும் ரசிகர்களை கவர்ந்ததால் படம் பாக்ஸ் ஆபிசில் ஹிட் அடித்தது.
தற்போது படம் வெளியாகி 5 நாட்கள் ஆகிவிட்ட நிலையில் சீன் திரைப்படம் உலகம் முழுவதும் 174 கோடியை வசூலித்து சாதனை செய்திருக்கிறது. சூர்யாவுக்கு தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களிலும் ரசிகர்கள் இருப்பதால் இப்படம் நல்ல வசூலை பெற்று வருகிறது. விரைவில் சீன் திரைப்பம் ரூ.200 கோடி வசூலை தாண்டும் என கணிக்கப்படுகிறது.

