1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
  4. bailwan ranganathan says ishwarya arjun issue

உமாபதியை பிரிந்து வாழும் அர்ஜூன் மகள்!.. இதுதான் காரணம்.. பயில்வான் ரங்கநாதன் பகீர்!..

aishwarya arjun
ஆக்சன் கிங் அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யா. சில திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் குணச்சித்திர மற்றும் காமெடி நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதியை காதலித்து கடந்த 2024ம் வருடம் ஜூன் 10ம் தேதி திருமணம் செய்து கொண்டார்.  மகளின் விருப்பத்தை ஏற்று உமாபதிக்கு அவரை திருமணம் செய்து வைத்தார் நடிகர் அர்ஜுன்.

ஆனால் சமீபத்தில் அர்ஜுனின் இளைய மகளின் திருமணம் வெளிநாட்டில் நடந்த போது அந்த திருமண விழாவில் உமாபதி கலந்து கொள்ளவில்லை. இதையடுத்து உமாபதியும், ஐஸ்வர்யாவும் பிரிந்து வாழ்கிறார்கள் என்கிற செய்தி வெளியே கசிந்தது.

இந்நிலையில், இது தொடர்பாக யுடியூப் வீடியோவில் பேசிய பயில்வான் ரங்கநாதன் ‘ஐஸ்வர்யாவுக்கு மது அருந்தும் பழக்கம் உண்டு.. திருமணத்திற்கு பின்னரும் கணவன் வீட்டிலேயே மது அருந்தியிருக்கிறார். இதை பார்த்து உமாபதி அதிர்ச்சி அடைந்துள்ளார்.. அவரின் அப்பா தம்பி ராமையாவிடம் இதை சொல்ல அவரும் முடிந்தவரை மருமகளுக்கு அறிவுரை சொல்ல முயற்சி செய்திருக்கிறார்.. மாமியாரும் அறிவுரை கூறியிருக்கிறார்.. ஆனால் ஐஸ்வர்யா கேட்கவில்லை..

ஒரு கட்டத்தில் இது வாக்குவாதமாக மாறி கைகலப்பாக மாறிவிட்டது .அந்த கோபத்தில் தனது அப்பா வீட்டுக்கு சென்று விட்டார் ஐஸ்வர்யா. சென்றவள் அவளை திரும்பி வரட்டும் என்கிற ஆண்மகனின் கோபத்தில் உமாபதியும் அவரை திரும்பி அழைக்கவில்லை. அர்ஜுனாலும் எதுவும் செய்ய முடியவில்லை.  அதனால்தான் ஐஸ்வர்யாவின் இளைய மகள் திருமணத்தில் உமாபதியும்,  தம்பி ராமையாவும் கலந்து கொள்ளவில்லை’ என பயில்வான் ரங்கநாதன் கூறியிருக்கிறார்.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
நீண்ட நாள் காதலரை கரம்பிடித்த பிரியா பவானி சங்கர்!.. வைரலாகும் புகைப்படங்கள்..