1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
  4. blast movie world wide collection report

75 கோடி வசூலை அள்ளிய பிளாஸ்ட்!... தமிழ்நாட்டில் மட்டும் இத்தனை கோடியா?..

blast
சுபாஷ் கே ராஜ் என்பவர் இயக்கத்தில் அர்ஜுன், ப்ரீத்தி முகுந்தன், அபிராமி உள்ளிட்ட பலரும் நடித்து கடந்த மே 28ம் தேதி வெளியான திரைப்படம் பிளாஸ்ட். தபோதைய சூழ்நிலையில் அர்ஜுனுக்கு பெரிய சினிமா வியாபாரம் இல்லாத நிலையில் இந்த திரைப்படம் அவருக்கு ஒரு சூப்பர் ஹிட் படமாக அமைந்து விட்டது.
 
இந்த படத்தில் அபிராமியின், ப்ரீத்தி முகுந்தனும் அதிரடியாக சண்டை போடும் காட்சிகள் இந்த படத்திற்கு பெரிய பலமாக அமைந்திருக்கிறது. இந்நிலையில் பிளாஸ்ட் திரைப்படம் உலகம் முழுவதும் 75 கோடி வசூல் செய்து சாதனை படைத்திருக்கிறது. குறிப்பாக வெளிநாடுகளில் படத்தின் வசூல் நாளுக்கு நாள் வசூல் அதிகரித்துக் கொண்டே சென்றிருக்கிறது.
 
தமிழ்நாட்டில் மட்டும் பிளாஸ்ட் திரைப்படம் 40 கோடி வசூல் செய்திருக்கிறதாம். சமீபகாலமாகவே குறைவான பட்ஜெட்டில் உருவாக்கும் திரைப்படங்கள் நல்ல வசூலை பெற்று வருவது தயாரிப்பாளர்களுக்கு நம்பிக்கையை கொடுத்துள்ளது.
அடுத்த கட்டுரையில்
பார்க்கிங் பட இயக்குனரை கைவிட்ட ரஜினி, எஸ்.கே!.. கை கொடுத்த சிம்பு!..