செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 4 டிசம்பர் 2021 (09:02 IST)

பெண் ஒரு சொத்தோ பொருளோ அல்ல... உரிமையை பேசும் தாலிபன்கள் !!

ஆப்கானிஸ்தானை கைப்பற்றி ஆட்சி அமைத்துள்ள தாலிபன் அரசு பெண்களின் உரிமை பற்றி புதிய ஆணைகளை வெளியிட்டுள்ளது. 

 
ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் வெளியேறிய நிலையில் தாலிபான்கள் அங்கு ஆட்சியை கைப்பற்றினர். தாலிபான்கள் ஆட்சியமைத்தது முதலாக ஆப்கானிஸ்தான் சட்டத்திட்டங்களில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி வருகின்றனர். முக்கியமாக தாலிபான்கள் ஆட்சியில் பெண்கள் மீதான அடக்குமுறை அதிகரித்து வருவதாக பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர்.
 
இந்நிலையில் தாலிபன் அரசு பெண்களின் உரிமை பற்றி புதிய ஆணைகளை வெளியிட்டுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, பெண் ஒரு சொத்தோ பொருளோ அல்ல, உன்னதமான சுதந்திரமான மனித குலம். பெண்களுக்கு கட்டாய திருமணம் செய்யக்கூடாது. ஒரு பெண்ணை அமைதிக்கு ஈடாகவோ அல்லது பகைமையை முடிவாகவோ  யாரும் பயன்படுத்தக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
திருமணம் பற்றிய உரிமை குறித்து தெரிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் பெண்களுக்கு கல்வி கற்கும் உரிமை, பணியாற்றும் உரிமை குறித்து அந்த ஆணையில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. முன்னதாக ஆப்கானிஸ்தானில் டிவி சீரியல்கள் மற்றும் பெண்கள் இடம்பெறும் சோப்பு, சாம்பு மற்றும் அழகுசாதன பொருள் விளம்பரங்கள் போன்றவற்றை ஒளிபரப்ப தடை விதித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.