திங்கள், 23 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மரு‌த்துவ‌க் கு‌றி‌ப்பு
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 23 நவம்பர் 2021 (00:59 IST)

சோம்பு தண்ணீரை குடிப்பதால் கிடைக்கும் பலன்கள்...!

தினமும் சோம்பு தண்ணீர் குடிச்சு வந்தால் உடல் எடையை குறைக்கலாம். சமையலில் பயன்படுத்தும் மணமிக்க உணவுப் பொருளான சோம்பு, உடல்  எடையைக் குறைக்க உதவும்.
 
ஆயுர்வேத மருத்துவத்தில் உடல் பருமனை குறைக்க சோம்பு தண்ணீர் பரிந்துரைக்கப்படுகிறது. ஏனெனில் சோம்பில் உடலை சுத்தப்படுத்தும்,  மெட்டாபாலிசத்தை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் அதிக அளவில் நிறைந்துள்ளன. இங்கு சோம்பு தண்ணீர் எப்படி உடல் எடையைக் குறைக்க அதிக கஷ்டப்படாமல், சோம்பு தண்ணீர் குடித்து குறைத்துக் கொள்ளலாம். இதன் மூலம் பலன் தாமதமாக கிடைத்தாலும் நிரந்தரமானதாக இருக்கும்.
 
அளவுக்கு அதிகமாக பசி எடுப்பவர்களுக்கு சோம்பு தண்ணீரைக் குடித்து வந்தால், அது இயற்கையிலேயே பசியை அடக்கும். தினமும் காலையில் காபி  குடிப்பதற்கு பதிலாக, சோம்பு தண்ணீரைக் குடித்து வந்தால் மூளை நன்கு சுறுசுறுப்புடனும் புத்துணர்ச்சியுடனும் செயல்படும்.
 
சோம்பு தண்ணீர் இரத்தத்தில் உள்ள அதிகப்படியான யூரிக் ஆசிட்டுகளை வெளியேற்றி, இரத்தத்தில் சுத்தப்படுத்தும். மேலும் உடலில் இருந்து டாக்ஸின்களை முற்றிலும் வெளியேற்றி சிறுநீரகங்களில் பிரச்சனை ஏற்படுவதை தடுக்கும்.
 
சோம்பு தண்ணீர் மெலடோனின் என்னும் மூளையில் பிட்யூட்டரி சிரப்பியால் சுரக்கப்படும்  ஹார்மோனை சீராக உற்பத்தி செய்து, நல்ல நிம்மதியான  தூக்கத்தைப் பெற வழிவகுக்கும். இதன் மூலம் ஆரோக்கியமான உடல் எடையைப் பராமரிக்கலாம்.