ஞாயிறு, 17 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 26 நவம்பர் 2021 (08:23 IST)

1000 ஆண்களுக்கு 1,020 பெண்கள்; இந்தியாவில் உயர்ந்த பெண்கள் எண்ணிக்கை!

இந்தியாவில் 2019-21 ம் ஆண்டுக்கான குடும்ப சுகாதார சர்வேயில் ஆண்களை விட பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது தெரிய வந்துள்ளது.

இந்தியாவில் ஆண்டுதோறும் குடும்ப சுகாதார சர்வே எடுக்கப்பட்டு வரும் நிலையில் 1000 ஆண்களுக்கு நிகரான பெண்களின் எண்ணிக்கை எப்போது குறைவாகவே இருந்து வந்துள்ளது. 2015-16ல் 929 பெண்களும், 2019-2020ல் 929 பெண்களுமாக இருந்தது.

இந்நிலையில் தற்போது எடுக்கப்பட்டுள்ள 2019-21க்கான சர்வேயில் 1000 ஆண்களுக்கு 1,020 பெண்கள் என்ற எண்ணிக்கையில் மக்கள் தொகை உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் பெண்கள் எண்ணிக்கை ஆண்களை விட உயர்வது இதுவே முதல்முறை. பெண்கள் எண்ணிக்கை குறைவாக உள்ள மாநிலங்களில் குஜராத், மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்கள் உள்ளன.