தடுப்பூசி போடலைனா மட்டும் சாப்பாடு; அதிர்ச்சியளிக்கும் இத்தாலிய உணவக விளம்பரம்!
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு உள்ள நிலையில் தடுப்பூசி போடாதவர்களுக்கு உணவு என உணவகம் விளம்பரப்படுத்தியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில் கொரோனா தடுப்பூசி போடுவதை உலக நாடுகள் தீவிரப்படுத்தி வருகின்றன. இந்நிலையில் அமெரிக்காவின் கலிபொர்னியாவில் அமைந்திருக்கும் உணவகம் ஒன்று கொரோனா தடுப்பூசி போடாதவர்களுக்கு மட்டும் உணவு வழங்கப்படும் என நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதேபோல கடந்த ஆண்டில் கொரோனாவால் உலகம் முழுவதும் மாஸ்க் அணிய வலியுறுத்தியபோது இதே உணவகம் மாஸ்க் ப்ரீ மண்டலம் என அறிவித்திருந்தது. தொடர்ந்து கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிராக உணவகம் செயல்படுவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.