புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 25 டிசம்பர் 2024 (10:12 IST)

பாலியல் வன்கொடுமை, கொலை செய்பவர்களுக்கு மரண தண்டனை: டொனால்ட் டிரம்ப்..!

பாலியல் வன்கொடுமை செய்பவர்கள் மற்றும் கொலை செய்பவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபராக பொறுப்பேற்க இருக்கும் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
அமெரிக்காவில் 37 மரண தண்டனை கைதிகளின் தண்டனையை தற்போது அதிபர் ஜோ பைடன் குறைத்த நிலையில், இதுகுறித்து டொனால்ட் டிரம்ப் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
 
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "குற்றவாளிகளின் தண்டனையை குறைத்ததை வன்மையாக கண்டிக்கிறேன்" என்றும், "இவர்களது செயலால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் வேதனையை நான் பகிர்ந்து கொள்கிறேன்" என்றும் தெரிவித்துள்ளார்.
 
"மரண தண்டனையை நிறுத்த வேண்டும் என்பதில் முன்னே போதையும் விட நான் உறுதியாக இருக்கிறேன். ஆனால் அதே நேரத்தில், பாலியல் வன்கொடுமையாளர்கள் மற்றும் கொலையாளிகளுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும்" என்றும் அவர் கூறியுள்ளார்.
 
"37 பேர் மோசமான கொலையாளிகள். அவர்களுடைய மரண தண்டனையை ஜோ பைடன் குறைத்துள்ளதை கண்டிக்கிறேன்" என்று கூறியுள்ள அவர், "அமெரிக்க குடும்பங்கள் மற்றும் குழந்தைகளை பாதுகாக்க வேண்டும் என்றால் பாலியல் வன்கொடுமையாளர்கள் மற்றும் கொலையாளிகளுக்கு மரண தண்டனையை தீவிரமாக மேற்கொள்ள நீதித்துறைக்கு உத்தரவிடுவேன்" என்றும் தெரிவித்துள்ளார்.
 
நான் அதிபராக பதவியேற்ற உடன் அமெரிக்காவை சட்டம் ஒழுங்கு நாடாக மாற்றுவேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 
 
Edited by Mahendran