புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 28 பிப்ரவரி 2022 (10:09 IST)

உக்ரைன் ராணுவ வீரர்களின் சம்பளம் 10 மடங்கு உயர்வு… அறிவித்த அதிபர்!

உக்ரைன் மீதான் ரஷ்யாவின் படையெடுப்பு உலகளவில் பல பொருளாதார பாதிப்புகளை உருவாக்கி வருகிறது.

உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்துள்ளது உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. உக்ரைனில் பல நாட்டு மக்களும் சிக்கியுள்ள நிலையில் பலர் அண்டை நாடுகளான லிதுவேனியா, லாட்வியா, பெலாரஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு தப்பி சென்று அங்கிருந்து சொந்த நாடுகளுக்கு செல்கின்றனர். உக்ரைனில் 20 ஆயிரம் இந்தியர்கள் சிக்கியுள்ள நிலையில் அவர்களை விமானம் மூலமாக மீட்க மத்திய அரசு “ஆபரேஷன் கங்கா” திட்டத்தை செயல்படுத்தியுள்ளது. இதன்மூலம் உக்ரைனின் எல்லைப்பகுதிகள் வழியாக இந்தியர்கள் மீட்கப்பட்டு வருகின்றனர். இதுவரை நான்கு விமானங்கள் மூலமாக பலர் மீட்கப்பட்டனர்.

இந்த படையெடுப்புக்கு எதிராக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் கண்டனம் தெரிவிக்க, சீனா, பாகிஸ்தான் மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. ரஷ்ய படைகளை எதிர்த்து உக்ரைன் ராணுவம்  பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ராணுவ வீரர்களின் சம்பளத்தை 10 மடங்காக உயர்த்தியுள்ளார். முன்பு 340 டாலராக இருந்த ஊதியம் இப்போது 3400 டாலர் வரை உயர்த்தப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.