திங்கள், 8 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 28 அக்டோபர் 2025 (16:08 IST)

ஒரே இரவில் இந்திய இளைஞர் கோடீஸ்வரர் ஆன அதிசயம்.. ஐக்கிய அரபு அமீரகம் கொடுத்த ஜாக்பாட்..!

ஒரே இரவில் இந்திய இளைஞர் கோடீஸ்வரர் ஆன அதிசயம்.. ஐக்கிய அரபு அமீரகம் கொடுத்த ஜாக்பாட்..!
இந்திய இளைஞருக்கு ஐக்கிய அரபு அமீரக லாட்டரியில் ரூ. 240 கோடி ஜாக்பாட்!
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்பட்ட லாட்டரி குலுக்கலில், இந்தியாவை சேர்ந்த 29 வயது இளைஞர் அனில்குமார் பொல்லா சுமார் ரூ. 240 கோடி பிரம்மாண்டமான ஜாக்பாட் பரிசை வென்றுள்ளார். 
 
அபுதாபியில் ஏற்றுமதியாளராக வசித்து வரும் அனில்குமார், 23வது அதிர்ஷ்ட நாள் குலுக்கலில் ஏழு வெற்றி எண்களும் பொருந்தியதால், இந்த முழு பரிசுத் தொகையையும் யாருடனும் பகிராமல் தனியாக வென்றுள்ளார்.
 
லாட்டரி குழுவிலிருந்து அழைப்பு வந்தபோது தான் அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்ததாக அனில்குமார் தெரிவித்துள்ளார். இது தனது நீண்ட நாள் கனவு என்றும், அழைப்பு வந்தபோது ஆரம்பத்தில் நம்ப முடியாமல் மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தச் சொன்னதாகவும் அவர் கூறியுள்ளார். 
 
88 லட்சம் போட்டியாளர்களில் இவர் ஒருவராக இந்த மெகா பரிசை வென்று, ஒரே இரவில் அமீரகத்தின் புதிய கோடீஸ்வரராக உருவெடுத்துள்ளார்.
 
Edited by Mahendran