செவ்வாய், 9 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 8 அக்டோபர் 2025 (14:31 IST)

ஒரே இரவில் கோடீஸ்வரர்: பெயிண்ட் கடை ஊழியருக்கு ரூ. 25 கோடி ஓணம் பம்பர் லாட்டரி! மறுநாளே வேலைக்கு சென்ற அதிசயம்..!

ஒரே இரவில் கோடீஸ்வரர்: பெயிண்ட் கடை ஊழியருக்கு ரூ. 25 கோடி ஓணம் பம்பர் லாட்டரி! மறுநாளே வேலைக்கு சென்ற அதிசயம்..!
கொச்சியில் உள்ள பெயிண்ட் கடையில் பணிபுரிந்த சரத் எஸ். நாயர் என்பவரின் வாழ்க்கை, சமீபத்தில் அவருக்கு விழுந்த ரூ. 25 கோடி மதிப்புள்ள ஓணம் பம்பர் லாட்டரி முதல் பரிசால் ஒரே இரவில் மாறியுள்ளது.
 
ஆலப்புழா துறவூரை சேர்ந்த சரத், நெட்டூரில் வாங்கிய 'TH 577825' என்ற டிக்கெட் மூலமே இந்த அதிர்ஷ்டத்தை பெற்றார்.
 
லாட்டரி முடிவுகள் வெளியானபோது பணியில் இருந்த அவர், முதலில் தனது சகோதரருடன் எண்ணை உறுதிப்படுத்தினார்.
 
"இந்தத் தொகையை என்ன செய்வது என்று இன்னும் திட்டமிடவில்லை. இதுவே நான் வாங்கிய முதல் ஓணம் பம்பர் டிக்கெட். எதிர்காலத்திலும் லாட்டரிகள் வாங்குவதை தொடர்வேன்," என்று சரத் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
 
லாட்டரி வெற்றிக்கு பிறகும், அடுத்த நாள் தனது பணிக்கு திரும்பிய சரத்துக்கு, அவரது சக ஊழியர்கள் மற்றும் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர்கள் இணைந்து உற்சாக வரவேற்பு அளித்து சிறப்பு பாராட்டு விழாவை நடத்தினர். இந்த வெற்றி சரத்தின் குடும்பத்திற்கு நிதி பாதுகாப்பை உறுதி செய்துள்ளது.
 
Edited by Mahendran