திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 2 பிப்ரவரி 2021 (17:53 IST)

சிகரெட் பழக்கத்தால் உடலில் தோன்றிய கட்டிகள்…

ஆண்களுக்கு மட்டுமே இருந்த புகைப்பழக்கம் இந்த நவநாகரிக உலகில் பெண்களுக்கும் தொற்றியுள்ளது. மேற்கத்திய உலகில் இருந்த இந்தக் கலாச்சாரம் தற்போது மற்ற நாடுகளிலும்  சமீப காலங்களாக பரவிவருகிறது.

இந்த புகைப்பிடித்தல் என்பது உயிருக்குக் கேடு என்று விழிப்புணர்வு, விளம்பரங்கள் வாயிலாகச் சொன்னாலும் யாரும் அதைக் கேட்பதில்லை. இளைஞர்களே இப்பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளனர்.

இந்நிலையில் சீனாவைச் சேர்ந்த நபர் ஒருவர் தொடர்ந்து 30 ஆண்டுகளாகப் புகைப்பிடித்து வந்ததால் உடலில் கட்டிஉருவாகியுள்ளது.

மேலும் அவருக்கு மஞ்சல் காமாலை உருவாகி அவரது ரத்தம் அடர் மஞ்சல் நிறத்திற்கு மாறியுள்ளது. தற்போது அவர் மருத்துவமனையில் அறுவைச் சிகிச்சை மூலம் கட்டி அகற்றப்பட்டதால் அவர் நலமுடன் உள்ளதாகத் தகவல் வெளியாகிறது.