ரீமேக் படத்தில் ஏன் நடிப்பதில்லை - சூர்யா சுவாரஸ்ய பதில்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் சூர்யா. இவரது தயாரிப்பில் கடந்தாண்டு வெளியாகி சூப்பர் ஹிட் ஆன திரைப்படம் சூரரைப் போற்று. சுதா கொங்கரா இயக்கத்தில் உருவான இப்படம் அனைத்து சினிமா பிரபலங்களாலும் பாராட்டப்பட்டது.
அமெச்சானில் ரூ.100 க்கு விற்கப்பட்டது. தற்போது ஆஸ்கர் படவிழாவில் திரையிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் தனது படத்தின் ரீமேக்கில் ஏன் நடிப்பதில்லை என்பது குறித்து சூர்யா விளக்கமளித்துள்ளார். ஒரு விஷயத்தை நன்றாகச் செய்துவிட்டார் அதை மீண்டும் செய்யத் தோன்றாது. நம்மால் மீண்டும் 10 மற்றும் 12 வது பரீட்சை எழுதமுடியாதல்லா ?? எனவே ஒரு விஷயத்தை முடித்ததும் நாம் அடுத்த விஷயத்திற்கு நகர வேண்டும் என்று கூறியுள்ளார்.
மேலும் ரத்தச்சரித்திரம்-2 படத்தில் நடிப்பது இப்படத்தின் இயக்குநர் ராம்கோபால் வர்மாவின் ரசிகனாக இருப்பதால். இன்னொரு முறை இந்திப் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தால் அதில் நடிக்க கடுமையாக உழைப்பேன்…என்று தெரிவித்துள்ளார்.
சூர்யா அடுத்து பண்டியராஜ் இயக்கத்தில் ஒரு கிராமப் பின்னணிப் படத்தில் நடிக்கவுள்ளார். அடுத்து வெற்றிமாறனின் வாடிவாசல் படத்திலும் நடிக்கவுள்ளார்.