புயல் கடந்தபோதிலும் எச்சரிக்கை.. தமிழகத்தில் நாளை 15 மாவட்டங்களில் கனமழை..!
வங்கக்கடலில் தோன்றிய புயல் கரையை கடந்த போதிலும், சென்னை உள்பட சில மாவட்டங்களில் மழை தொடர்ந்து வரும் நிலையில், நாளை 15 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புயல் இன்று காலை மேலும் வலு குறைந்து, காற்றழுத்த தாழ்வு பகுதியாக வட தமிழக உள்பகுதியில் நிலவி வருகிறது. இதன் காரணமாக, நாளை அதாவது டிசம்பர் 3ஆம் தேதி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், மதுரை, திருச்சி, பெரம்பலூர், திருப்பத்தூர் ஆகிய 15 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
எனவே, மேற்கண்ட 15 மாவட்டங்களில் உள்ள பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.
Edited by Siva