செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 2 பிப்ரவரி 2021 (17:35 IST)

என் டுவிட்டர் பதிவுகள் இருட்டடிப்பு செய்கிறார்கள் - முன்னணி நடிகர்

தனது டுவிட்டர் பதிவுகள் இருட்டடிப்புச் செய்யப்படுவதாக நடிகர் சித்தார்த் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் இயக்குநர்களின் சூப்பர் ஸ்டார் மணிரத்னம். இவரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர் நடிகர் சித்தார்த்.

பின்னர், இயக்குநர் ஷங்கரின் பாய்ஸ் ப்டத்தில் ஹீரோவாக அறிமுகமாகி, தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம்வருகிறார்.

இவர் தற்போது இந்திய -2 படத்தில் நடித்து வருகிறார். 

சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் சித்தார்த், சமீபத்தில் டெல்லியில் தொடர்ந்து போராடி வரும் விவசாயிகள் குறித்த தனது கருத்துகளைக்கூறியதுடன் மத்திய அரசின் தவறுகளையும் கூறியதுடன், காந்தியை சுட்டுக்கொன்ற கோட்சேவை தீவிரவாதி, கொலையாளி  என்று தனது டுவிட்டர் பக்கத்தில் விமர்சித்திருந்தார்.

இந்நிலையில் தற்போது தனது டுவிட்டர் கணக்கில் உள்ள பதிவுகளை டுவிட்டர் நிறுவனம் இருட்டடிப்பு செய்து வருவதாகவும், தன் அக்கடவுண்ட் இதுவரை 5 முறை ஹெக் செய்யப்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ளதுடன் இதை டுவிட்டர் நிறுவனத்திற்கு டேக் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நடிகர் சித்தார்த்திற்கு பலரும் ஆதவு தெரிவித்துள்ளனர்.