வியாழன், 14 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 27 செப்டம்பர் 2022 (10:46 IST)

இன்று உலக சுற்றுலா தினம்; சுற்றுலாவுக்கு ஒரு தினம் எதற்காக?

World Tourism Day
உலகம் முழுவதும் உள்ள மக்களிடையே சுற்றுலாவை ஊக்குவிக்கும் வகையில் இன்று “உலக சுற்றுலா தினம் (World Tourism Day)” கொண்டாடப்படுகிறது.

உலகம் முழுவதும் உள்ள மக்கள் பலருக்கும் சுற்றுலா செல்வது என்பது இனிமையான பொழுதுபோக்காக உள்ளது. தொடர்ந்து ஒரு பகுதியிலேயே வசித்து வருபவர்கள், வேலைப்பளு உள்ளிட்ட காரணங்களுக்காக இயற்கை சூழ்ந்த புதிய பகுதிகளை காண்பதற்கும், அங்கு நேரம் செலவழிப்பதற்கும் ஆர்வம் காட்டுகின்றனர். சுற்றுலா செல்வது பிற மக்களின் வாழ்க்கை, உணவு, கலாச்சாரத்தை புரிந்து கொள்ளவும் உதவுகிறது.

உலகம் முழுவதும் மக்களிடையே சுற்றுலா குறித்த விழிப்புணர்வு மற்றும் ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் United Nations World Trade Organisation கடந்த 1980 செப்டம்பர் 27ம் தேதியை உலக சுற்றுலா தினமாக அறிவித்தது. அதுமுதல் ஆண்டுதோறும் செப்டம்பர் 27ம் தேதி உலக சுற்றுலா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
Ooty Train


உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு பல சுற்றுலா தளங்களில் சுற்றுலா பயணிகளுக்கு இலவச அனுமதி வழங்கப்படுகிறது. மேலும் பல சுற்றுலா பகுதிகளில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு சுற்றுலா பயணிகள் உற்சாகப்படுத்தப்படுகின்றனர்.

தற்போது அனைவரிடமும் பைக் உள்ள நிலையில் எந்தவொரு இடத்திற்கும் பைக்கிலேயே சாகச சுற்றுலா செல்வது இளைஞர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. இந்திய இளைஞர்கள் பலரின் பைக் சாகச சுற்றுலா கனவாக லடாக் உள்ளது.