1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 9 ஆகஸ்ட் 2022 (22:10 IST)

சீனாவில் சிக்கி கொண்ட 80 ஆயிரம் சுற்றுலா பயணிகள்: வெளியேற முடியாமல் தவிப்பு!

China
சீனாவில் நாளுக்குநாள் கொரனா வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருவதையடுத்து அங்கு தற்போது பல பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது
 
 இந்த நிலையில் சீனாவில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்க தொடங்கியதால் அங்கு சென்ற சுற்றுலா பயணிகள் சீனாவில் இருந்து வெளியேற முடியாமல் தவித்து வருவதாக கூறப்படுகிறது 
 
உலகெங்கிலுமிருந்து வந்த 80 ஆயிரம் சுற்றுலா பயணிகள் தற்போது சீனாவில் சிக்கியிருப்பதாகவும் அவர்களை அவரவர் நாடுகளுக்கு அனுப்ப தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது
 
இது குறித்து சீன அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என உலக நாடுகள் கோரிக்கை விடுத்து வருகின்றன.