செவ்வாய், 10 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 14 நவம்பர் 2024 (14:21 IST)

மதுரை காவல்நிலையம் அருகே துண்டிக்கப்பட்ட தலை.. உடல் எங்கே? அதிர்ச்சி சம்பவம்..!

மதுரை காவல் நிலையம் அருகே துண்டிக்கப்பட்ட தலை மட்டும் இருந்ததை அடுத்து, உடல் எங்கே என்று தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மதுரை திருப்பாலை காவல் நிலையம் அருகே 60 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் தலை, துண்டிக்கப்பட்ட நிலையில், சாலையில் கிடந்ததாக வெளியான செய்தி அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காலை 7 மணிக்கு துண்டிக்கப்பட்ட தலையை பார்த்த பொதுமக்கள், உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்த நிலையில், காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, துண்டிக்கப்பட்ட தலையை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

 தலையை கத்தி போன்ற கூர்மையான ஆயுதத்தால் அறுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ள நிலையில், அந்த தலைக்கான உடல் எங்கே என்று மோப்பநாய் உதவியுடன் காவல்துறையினர் தேடி வருவதாக கூறப்படுகிறது.

கொலை செய்யப்பட்ட நபர் குறித்த விவரம் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்றும், விசாரணையில் விரைவில் தெரியவரும் என்று கூறும் காவல்துறை அதிகாரிகள், விரைவில் கொலையாளியை பிடித்து விடுவோம் என்று கூறி வருகின்றனர். இந்த சம்பவம் காரணமாக, அந்த பகுதியில் பதட்ட நிலை ஏற்பட்டுள்ளது.


Edited by Siva