செவ்வாய், 10 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 14 நவம்பர் 2024 (14:38 IST)

நடிகர் மிதுன் சக்கரவர்த்தி பர்ஸ் திருடு போகவே இல்லை: பாஜக விளக்கம்..!

Mithun
பாஜகவுக்கு பிரச்சாரம் செய்ய சென்ற போது நடிகர் மிதுன் சக்கரவர்த்தியின் பர்ஸ் திருடு போனதாக ஊடகங்களில் செய்திகள் வெளியான நிலையில், பாஜக இது குறித்து விளக்கம் அளித்துள்ளது.

நடிகர் மிதுன் சக்கரவர்த்தி பாஜக வேட்பாளர்களை ஆதரித்து தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார். ஜார்கண்ட் மாநிலத்தில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய போது, அவரது பர்ஸ் திருடப்பட்டதாக கூறப்பட்டது.

பொதுக் கூட்டத்திற்கு பின்னர் அவர் ரோட் ஷோவில் கலந்து கொண்டார். அப்போது தான் பர்ஸ் திருடப்பட்டதாக அவர் உணர்ந்ததாக கூறப்பட்டது. ஆனால் மிதுன் சக்கரவர்த்தியின் பர்ஸ் திருடப்பட்டதாக கூறுவதை பாஜக மறுத்துள்ளது.

மிதுன் சக்கரவர்த்தியின் பர்ஸ் திருடு போகவில்லை என்றும், தவற விட்டதாகவும், பின்னர் கண்டெடுக்கப்பட்டு அவரிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  


Edited by Mahendran