1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By siva
Last Updated : திங்கள், 26 செப்டம்பர் 2022 (19:18 IST)

நாளை முதல் கோவை குற்றாலம் மீண்டும் திறப்பு: சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

kovai
கோவை குற்றாலம் கடந்த சில நாட்களாக சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்க முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
வெள்ளப்பெருக்கு காரணமாக கடந்த ஜூலை மாதம் முதல் கோவை குற்றாலம் மூடப்பட்டது என்பதும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லை என வனத்துறை அறிவித்திருந்தது என்பதும் தெரிந்ததே
 
இந்த நிலையில் தற்போது வெள்ளப்பெருக்கு குறைந்துள்ள நிலையில் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் என வனத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது இதனால் கோவை செல்லும் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
நாளை முதல் மீண்டும் கோவை குற்றாலம் திறக்கப்படும் என்ற அறிவிப்பு அனைவருக்கும் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது