வியாழன், 19 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Siva
Last Updated : திங்கள், 8 ஏப்ரல் 2024 (07:12 IST)

இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம்.. இன்று 9 நிமிடங்கள் வரை இருள் சூழும் பகுதிகள் எவை எவை?

இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் இன்று நிகழ இருப்பதை அடுத்து 4 நிமிடங்கள் முதல் 9 நிமிடங்கள் வரை சில பகுதிகளில் இருள் சூழலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இன்று நிகழும் சூரியன் இந்தியாவில் தென்படாது என்றாலும் அமெரிக்கா, மெக்சிகோ, கனடா உள்ளிட்ட நாடுகளில் தெரியும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
 
சூரியனுக்கும் பூமிக்கும் இடையே உள்ள நேர்கோட்டு புள்ளியாக சந்திரன் வரும்போது சூரியனை சந்திரன் மறைப்பதால் சூரிய கிரகணம் நிகழ்வதாக  கூறப்படுகிறது. இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் இன்று நிகழ இருப்பதை அடுத்து இந்த கிரகணத்தை பார்க்க கனடாவில் உள்ள நயாகரா நீர்வீழ்ச்சி அருகே ஏராளமான பொதுமக்கள் கூடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது

இது போன்ற ஒரு கிரகணம் மீண்டும் பசுபிக் பகுதிகள் இடம் பெற வாய்ப்பு இல்லை என்று கூறப்பட்டுள்ளதை அடுத்து பலர் இந்த கிரகணத்தை பார்க்க பலர் முன் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது

இந்த கிரகணம் அமெரிக்க நேரப்படி மதியம் 2.07 மணிக்கு தொடங்கும் என்றும் அப்போது அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் இருள் சூழலாம் என்றும் 4 நிமிடங்கள் முதல் 9 நிமிடங்கள் வரை இருள் சூழ வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது

சூரிய கிரகணம் நிகழும் போது இந்தியா இலங்கை உள்ளிட்ட நாடுகளில் இரவு நேரம் என்பதால் சூரிய கிரகணம் தெரிய வாய்ப்பில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva